பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 என்று பொருள் கொள்ளக் கூடாது. புலன்கள் ஒடுங்கி இருக்கும் தம்பிரான் என்று பெயர். ஒழிவில் ஒடுக்கம் என்பது ஒரு நூல் ஒழிந்தால் ஒடுக்கம் வருமாம். செய்கிற காரியங்களிலிருந்து ஒழிந்து நிற்றல் உண்மை யான ஒழிவாகும்; அதுவே உண்மைத் துறவு. துறவற நெறியை மேற்கொள்வதுதான் துறவு என்று எண்ணக் கூடாது. செய்யத் தகாத காரியங்களைச் செய்யாமல் இருப்பதும் ஒரு வகையில் துறவுதான். கொஞ்சம் கொஞ்சமாக நம்முடைய செயல்களை அடக்கிக் கொண்டு வந்தால், தேவைகளைத் துறந்து கொண்டு வந்தால், பூர்ணமான துறவு தானே சித்திக்கும். நம்முடைய அநாவசியத் தேவைகளைத் துறத்தல் முதல் நிலை. மிக அவசிய மான பொருள்களில் ஒரு பங்கைத் துறத்தல் அடுத்த நிலை. மிக அவசியமானவற்றையும் துறந்துவிடுவது கடைசி நிலை. இப்படிப் படிப்படியாகத் துறக்கும்போது கர்மேந்திரியங்களுடைய செயலும் படிப்படியாக அடங்கும்; ஞானேந்திரியங்களுடைய அநுபவ நுகர்ச்சியும் ஒடுங்கும். இப்படி அடங்கி ஒடுங்குவதற்கு இந்த உலகியல் வாழ்வில் இருந்து கொண்டே, ஆசாபாசங்களுக்கிடையே வாழ்ந்து கொண் டிருக்கும்போதே, முயற்சி செய்ய வேண்டும். இவை எல்லாம் ஒழிந்த பின் முயலலாம் என்று இருப்பவன் கடல் அலை ஒய்ந்தவுடன் நீராடலாம் என்று இருப்பவனைப் போன்றவன். அநுபவப் பொருள்கள் இருக்கும்போது எதையும் அநுபவிக்கா மல் துறந்து இருப்பதுதான் துறவு. "இளையான் அடக்கமே அடக்கம்" என்பர். உடம்பினால் தளர்ந்து முதிர்ந்து போன பெண் ஒருத்தி, "நான் கற்புடையவளாக இப்போது வாழ்கிறேன்' என்று சொல்லிக் கொண்டால் எப்படி இருக்கும்? 'விருத்தா நார் பதிவ்ரதா என்று வடமொழியில் சொல்வார்கள். பொருள் இருக்க வேண்டும்; அதை அநுபவிக்காமல் மனத்தை அடக்க வேண்டும். உடல் வலிவுடைய கட்டிளம் காளையாக இருக்க வேண்டும்; பிரம்ம சரிய ஒழுக்கத்தை மீறாமல் மனத்தை அடங்கி, இந்திரியங்களை அடக்கி வாழ வேண்டும். இதுதான் உண்மையான அடக்கம்; ஒடுக்கம். இது உள்ளத் துறவினால் வருவது. 130