பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓங்கார ஒளி "அறந்தான் இயற்றும் அவனிலுங் கோடி அதிகம்இல்லம் துறந்தான்; அவனிற் சதகோடி உள்ளத் துறவுடையோன்.” இல்லறத்தில் இருந்து பலவிதமான தர்மங்களைச் செய்கிறவனை விட இல்லம் துறந்தவன் ஒரு கோடி உயர்வானவன். அதைவிட நூறு கோடி அதிகமானவன் உள்ளத் துறவு உடையோன்' என் கிறார் பட்டினத்தடிகள். உள்ளத் துறவு, செயலும் அநுபவமும் மெல்ல மெல்லக் குறையும்போதுதான் உண்டாகும். உடம்பிலிருந்து உள்ளம் என்பதையே தனியாக அறுத்துவிட முடியாதா? விறகில் தீப் பற்றிக் கொண்டு கொழுந்து விட்டெரி கிறது. விறகிலிருந்து தீச்சுடரைத் தனியாகப் பிரிக்க முடியுமா? அப்படியே உடம்பினுள் இருக்கிற மனத்தைப் பிரிக்க முடியாது. வாசனா பலத்தினாவே நிலை பெறுவது மனம். செயலால் உண்டாகிற வாசனையைச் சார்ந்து மனம் நிற்கும். வினைகளை அறுத்தால் வாசனை மடியும். வாசனை மடிந்தால் மனம் மடியும். செயலும் அநுபவமும் குறையும்போது யான் எனது என்னும் செருக்கு மாயும். ஆங்காரமும் அடங்கார் ஒடுங்கார். பரமானந்தத்தே தேங்குதல் ஆங்காரம் அடங்குதல் ஐந்து கர்மேந்திரியங்களின் செயல் குறைவதனால் உண்டாகும். ஒடுங்குதல் - ஐந்து ஞானேந்திரியங் களின் நுகர்ச்சி மெல்ல மெல்லக் குறைதல். செயல் குறைந்தால் தான் அநுபவம் குறையும். நான் எனது என எண்ணிச் செயல்படு கிற மனிதன், "ஆண்டவன், ஆண்டவனது' என்று எண்ணினால் அந்த எண்ணம் குறையும். எல்லாம் ஆண்டவன் செய்கிறான் என்கிற நினைப்பினாலே தன் செயல் இழந்து, எல்லாப் பொரு ளும் ஆண்டவனுடையது என்கிற நினைப்பினாலே தன் நுகர்ச்சி யும் குறைந்து போகும். இதன் பயன் என்ன? பரமானந்தத்தே தேங்கலாம். ஆங்காரம் அடங்காதவர்கள், ஒடுங்காதவர்கள், பரமானந்தத்தே தேங்கார் பள்ளம் கண்ட இடத்தை நோக்கி நீர் ஓடுவது போல இன்பம் கண்ட இடத்தை நோக்கி நம்முடைய இந்திரியங்கள் எல்லாம் ஓடிவிடுகின்றன. இன்பம் எங்கே கிடைக்கும் எனத் தேடுகின்றன. 131