பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 கொஞ்சம் சுகமாகத் தூங்கவேண்டும் என்றால் ஒடுகிற வண்டியில் ஏறிப் படுத்தால் தூங்க முடியுமா? இரயில்வே 5ఖఖ யத்தில் வேலை செய்கிற ஊழியர்கள் நன்றாகத் தூங்க ೧೯r@ மென்று ரெயில் வண்டியில்தான் படுத்துக் கொள்வார்கள். ஒடும் வண்டியில் படுக்கமாட்டார்கள். கவர்னர், உயர்தர அதிகாரி இவர் களுக்குத் தனியாக எங்கோ மூலையில் கிடக்கும் ೧೯rಿಕೊಪ್ಪ ஏறிப் படுத்துக் கொள்வார்கள். அவர்களைப் Guaು நழக்கும் ஓடாத வண்டியில் ஏறிப் படுத்துக் கொண்டு தூங்கத் தெரிய வில்லை. ஒடுகிற வண்டியிலேயே தூங்கப் பார்க்கிறோம். உடம்பாகிய வண்டி ஒடிக்கொண்டே இருக்கிறது. மனம், வாக்கு, காயம் எல்லாம் ஒடிக் கொண்டே இருக்கும் போது தூங்க முடியுமா? உலகத்தில் நாம் தூங்குகிற தூக்கம் தூக்கமே அல்ல. கருவி கரணங்கள் எல்லாம் ஒடி ஒடிக் களைப்படைந்து தளர்ந்து போய் இளைப்பாறுவதை நாம் தூக்கம் என்கிறோம். கொஞ்சம் இளைப்புத் தணிந்தவுடன் மறுபடியும் அவை ஓட ஆரம்பித்து விடுகின்றன. கருவி கரணங்கள் களைப்படையாமல் பலத்தோடு இருக்கும்போதே மனத்தை அடக்கி, வாக்கை அடக்கி, செயலை அடக்கி அவற்றின் ஒட்டத்தைத் தடுத்து நிறுத்தித் தூங்குகிற தூக்கந்தான் உண்மையிலேயே இன்பமான தூக்கம். நாம் தூங்கு கிற தூக்கத்தில் கருவி கரணங்கள் ஒய்ந்து போய் நிற்கின்றன. ஞானிகள் தூங்குகிற தூக்கத்தில் கருவி கரணங்கள் ஒழிந்து போய் நிற்கின்றன. தூக்கம் என்பதே இன்ப அநுபவத்திற்குப் பின்தான் ஏற்படும். சிற்றின்பம் அநுபவித்த பின் அயர்ந்த தூக்கம் விளைகிறது. நல்ல விருந்து சாப்பிடுகிறான். உடனே அப்பாடி என்று படுத்துக் கொண்டு குறட்டைவிட ஆரம்பித்து விடுகிறான். இது நாக்கினால் விளைந்த இன்பம். சங்கீதம் கேட்கும் போது தான் ஆனந்தம் என்று நினைக்கிறோம். உயர்ந்த சங்கீதமானால் கேட்கிறபோது ஆனந்தம் விளைவது மாத்திரம் அல்ல; கேட்டுவிட்டு வீட்டிற்கு வந்தால் சாப்பிடக்கூடப் போகாமல் உட்கார்ந்து கொண்டு கேட்டு வந்த இன்னிசையை மனத்தாலே எண்ணி தூங்கத் தோன்றும். குற்றாலத்து அருவி மலையிலிருந்து பளார் பளார் என்று அலை மோதிக் கொண்டு வேகமாகக் கீழே விழுகிறது. அப்படி 132