பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓங்கார ஒளி அடித்துக் கொண்டு வேகமாக வருகிற அருவி சமபூமிக்கு வந்த வுடனே மெல்ல ஒடுகிறது. வாய்க்கால்களிலே பாய்ந்து பாய்ந்து அதன் வேகம் மிகவும் குறைந்து போகிறது. கடைசியில் சமுத்தி ரத்தோடு கலந்தவுடனே தேக்கமாகி விடுகிறது. அப்படி மிக வேகமாகச் சுற்றிச் சுழன்றுகொண்டு போகிற நம்முடைய பொறிகள் எல்லாம் மெல்ல மெல்ல வேகம் தணிந்து, ஒட்டம் குறைந்து, இறைவன் திருவருட் சமுத்திரத்திலே, பேரானந்த சாகரத்திலே, கலந்துவிடும்போது தேக்கம்.உண்டாகிறது. "பத்தித் திருமுகம் ஆறுடன் பன்னிரு தோள்களுமாய்த் தித்தித் திருக்கும் அமுதுகண் டேன்செயல் மாண்டடங்கப் புத்திக் கமலத் துருகிப் பெருகிப் புவனமெற்றித் தத்திக் கரைபுர ளும்பர மானந்த சாகரத்தே" என்று அருணகிரியார் முன்பு பாடியுள்ளார். அந்தப் பரமானந்த சாகரத்தில் கலந்துவிட்டால் ஒட்டம் அடங்கி விடும்; தேக்கம் உண்டாகும். அடித்துச் சுருட்டிக் கொண்டு வருகிற நதி தேங்கிக் கிடக்கிற கடலோடு கலந்து விட்டால் தானும் தேங்கி விடுவது போல, ஆங்காரம் அடங்கி, ஒடுங்கி, ஐம்புலன்களைச் சுட்டறுத்துப் பரமானந்த சாகரத்தே கலந்துவிட்டால் தேக்கம் உண்டாகும். கிணைப்பும் மறப்பும் அறுதல் தேக்கமாவது செயலும், அநுபவங்களும் அற்று நின்று, இன்பத்தின் உறைப்பாய் நிற்கிற நிலை. அதற்கு அப்புறம் என்ன? நினைப்பு இல்லை, மறப்பு இல்லை. இப்படி ஆங்காரம் அடங்கி, ஒடுங்கிப் பரமானந்தத்தே தேங்காதவர்கள், நினைப்பும் மறப்பும் அறார் என்கிறார் அருணகிரியார். நாம் ஆழ்ந்து தூங்குகிறோம். தூக்கத்திலே தட்டி எழுப்பி னால் எழுந்திருக்கும்போதே, 'நாம் இன்னார்' என்ற நினைவுடனே எழுந்திருக்கிறோம். அப்படியின்றி எழுந்திருந்து, "நான் யார்? எங்கே இருக்கிறேன்? நீங்கள் எனக்கு என்ன வேண்டும்?” என்று யாராவது கேட்பதுண்டா? எவ்வளவு நன்றாகத் தூங்கினாலும் எழுந்தவுடனேயே, "நான் இந்த இடத்தில் இருக்கிறேன்; நான் இன்னார் என்ற நினைவுடனே எழுந்திருப்போம். 333