பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 நாம் கோயிலுக்குப் போகிறோம். எத்தனை பெரிய கோயில் ஆனாலும், பிராகாரத்தால் பெரியதாக இருக்குமே தவிரக் கடைசி யில் மூல விக்கிரகம் இருக்கும் கர்ப்பக்கிருகம் சிறியதாகத்தான் இருக்கும். அந்தக் காலத்தில் விஷயம் ஒன்றும் தெரியாமல் மூல மூர்த்தியை ஒரே இருட்டு அடைந்த குகை போன்ற இடத்தில், காற்று வெளிச்சம் எதுவும் இல்லாத இடத்தில் வைத்திருக்கிறார்கள். எல்லாவற்றையும் இடித்துவிட்டு நல்ல வெளிச்சம் உள்ள இடத் தில் வைக்கக் கூடாதா?’ என்று சிலர் நினைக்கிறார்கள். வேண்டு மென்றேதான் நம்முடைய முன்னோர்கள் இருதயம் போன்று சன்னல் இல்லாத ஓர் இடத்தில் ஆண்டவனை வைத்தார்கள். கோயிலுக்குப் போய்க் கர்ப்பக் கிருகத்தில் இருக்கும் ஆண்டவனை ஒரு கணம் பார்த்தால் இருட்டில் தெரியாது. அப்புறம் மெல்லக் குனிந்து, கண்ணைக் கூர்ந்து பார்த்தால்தான் தெரியும். குருக்கள் தீபாராதனை காட்டும்போது மிக்க பிரகாசமாக, விளக்கமாகத் தெரியும். அவர்கள் தீபாராதனை காட்டும்போது தீபத்தால் ஓங்கார எழுத்தை எழுதுவதுபோல, ஒம் என்கிற சுழிப்பாகக் கையைச் சுற்றிக் காட்டுவார்கள். இந்த ஓங்கார ஒளி வட்டத்திற்குள் நாம் இறைவனது உருவத்தைக் காண் வேண்டும். அப்படிப் பார்க்கும் போதே அதை நாம் அடுத்தடுத்துப் பார்க்கக் கூடிய தியானப் பொருளாக வைக்க வேண்டும். ஓங்கார ஒளி வட்டத்திற்குள் நாம் காணுகின்ற சொரூபத்தை மனத்திலும் வைத்துப் பார்க்க வேண்டும். ஒம் என்ற மந்திரம் ஒலி உடையது என்று உணர்ந்திருக்கிறோம். தியான யோகத்தில் ஈடுபட்டவர்களுக்கு அதுவே ஒளியாகவும் தோன்றும். ஒலி ஒளி இரண்டும் கலந்த ஒன்றுதான் பிரணவ மந்திரம். புறத்தே ஒலியே இல்லாத மெளனம் ஒருவகை. புற ஒலி இருக்கையில் மெளனம் நிலவுவது ஒருவகை. ஒலியில்லாத மெளனத்தைப் பயிலுதல் நம்மால் இயலாது. ஒலி இல்லாத மெளன தியானத்தில் ஈடுபடும்போது புறத்திலிருந்து சிறிய ஒலி வந்தாலும் தியானம் கலைந்து விடும். புறச்சத்தம் காதில் விழுந்து தியானம் கலையாதவாறு நாமே ஓங்கார சத்தத்தை உள்ளே క్ట్ర கொண்டிருந்தால் அந்த ஒலி இதில் கலந்து அழிந்து I.D. - i36