பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 ஒம் என்பது எல்லா மந்திரங்களுக்கும் மூலமானது. எல்லா மந்திரங்களும் முடிந்த இடம் அது. உலகத்திற்கு ಅಖL இருப்பது கடல். கடல் நீர் மேகமாகி, மழையாகி, ஆறுகளாகிப் பூமியை வளப்படுத்துகின்றது. கடைசியில் அந்நீர் கடலில் 55 விழுகின்றது. கடல் மூலமாகவும், முடிந்த முடிபாகவும் இருக் கிறது. அது போன்றது ஓம். எல்லாமே ஒரு லயத்தோடு சேர்ந்து வேகமாகச் சுற்றும் போது ஒரு திரட்சியை அடைகிறது. பஞ்சாய்ப் பறக்கிறான் என்று சொல்கிறோம். சிறிய பொருள் பஞ்சு. அது சர்க்காவின் வேகத் திற்கு உட்படும்போது, முறுக்கு ஏறி உருண்டு திரட்சி பெற்று நூலாகிறது. பஞ்சு படாத பாடுபடும் தன்மை உடையது மனம். ஒம் என்ற பிரணவ மந்திரத்தைக் கருவியாகக் கொண்டு வேகமாக ஒரு லயத்தோடு (Rhythm) சேர்ந்து ஜபிக்க ஜபிக்க மனத்திலே அந்த ஒம் என்ற ஒலியே திரட்சி பெற்று உருவம் எடுத்து ஜோதிர் மயமாக ஆகிவிடும். எல்லா மந்திரங்களையும் தன்னுள் அடக்கிக் கொண்டு விளங்கும் பிரணவ மந்திரத்தை முதலில் வாய் விட்டு ஜபிக்கப் பழக வேண்டும். இரண்டாவது நிலையில் நாக்கு அசைவு மாத்திரம் இருக்கும்; ஒலி வெளிப்படாது. மூன்றாவது நாக்குக் கூட அசையாது; சுவாசம் போல உள்ளத்திற்குள் ஒலி நிற்கும். அதனுடன் கருவிகரணங்கள் எல்லாம் லயிக்க வேண்டும். அப்போது ஒம் என்பதன் உருவம் மனக்கண்ணில் ஒளிமயமாகப் பிரகாசிக்கும். அதற்குள் முருகன் உருவத்தை நிலை நிறுத்திக் காணமுடிந்தால் அதற்குப் பின்தான் அநுபவம் தொடங்குகிறது. ஓங்காரத்தின் ஒளிக்குள்ளே முருகன் உருவம் கண்டு அப்படியே தூங்கலாம். "ஆங்கார முள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்துத் தூங்காமல் தூங்கிச் சுகம்பெறுவ தெக்காலம்" என்று பத்திரகிரியார் பாடுகிறார். நம்மைப் பார்த்து ஒருவன் முட்டாள் என்றால், "நீதான் முட்டாள். உங்கள் அப்பாதான் முட்டாள்" என்று அவனை வாயினால் வைதுகொண்டே கையை நீட்டி அடிக்கக்கூடப் போகிறோம். நன்றாகத் தூங்குகிறோம். அப்போது நம் பக்கத்தில் 138