பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 எவ்வளவு தெரியுமா? அதற்காகத்தானே திரும்பக் குடிக்கிறார்கள், நமக்கு அப்படிச் சுகம் வரவேண்டாம். சாராயம் குடித்தவன் அடைகிற இன்பம் மறுபடியும் புத்தி தெளியும்போது இருப்ப தில்லை. தெளிந்த நிலையில் அவனுக்குத் துன்பமே விளைகிறது. அவன் இருட்டில் இருக்கிறவன். ஜீவன் முக்தர்களும் ஒரு வகையில் அவனைப் போன்றே இன்ப நிலை எய்துகிறார்கள் என்றாலும் அவர்கள் ஒளியில் சுகம் அனுபவிப்பார்கள். தூங்குதல் முருகன் உருவம் கண்டு தூங்கும் தூக்கம் நாம் தூங்கும் தூக்கம் போன்றது அல்ல; நாம் விழித்திருக்கும் விழிப்பும் அல்ல. அந்த நிலையில் இருப்பவர்களின் பொறிபுலன்கள் எல்லாம் செயல்படுவன போன்று தோன்றினாலும் அது தூக்கந் தான். நான் என்பது இல்லாமையினால் அது தூக்கம் ஆகிறது. இந்த நிலையை மக்கள் அடையவில்லையே என்று அருண கிரி நாதர் இரங்குகிறார். 'ஆங்காரம் அடங்கி, ஒடுங்கி, பரமானந்தத்தே தேங்கி, நினைப்பும் மறப்பும் அற்றுப் போக வேண்டும். இந்தத் தலை நிலையை அடைவதற்கு ஆரம்ப நிலையாகிய ஓங்காரத்து உள்ளொளிக்குள்ளே முருகன் உருவம் கண்டு தூங்கக் கூடாதா?’ என்கிறார். தினைப்போதளவு ஓங்காரத்துள்ளொளிக்குள்ளே முருகன் உருவம் கண்டு ஒருநாள் முழுவதும் தூங்கவேண்டாம். ஒரு நாளைக்கு இருபத்து நான்கு மணி, ஒரு மணிக்கு அறுபது விநாடி என்றெல்லாம் பாகுபாடு பண்ணிக் கொண்டு செயல் செய்து வருகிற நாம், முருகன் உருவத்தைப் பிரணவ ஒளி வட்டத்திற்குள் கண்டு தியானம் செய்ய ஒரு தினைப்போதளவாவது முயற்சி செய்யக் கூடாதா என்கிறார். தினைப்போதளவும் ஓங்காரத்து உள்ளொளிக்குள்ளே முருகன் உருவம் கண்டு தூங்கார், கொஞ்ச நேரம் தியானம் செய்யக் கூடாதா என்று சொல்ல வருகிறார் அருணகிரியார். கொஞ்ச நேரத்தைக் குறிக்க, 'தினைப் i4()