பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓங்கார ஒளி போதளவு' என்று சொல்கிறார். கடுகு அளவு காலம் என்று சொல்லியிருக்கலாம்; எள்ளளவு நேரம் என்றும் கூறியிருக்கலாம். அவர் எப்போதும் முருகனையும் வள்ளியெம் பெருமாட் டியையும் நினைந்து வாழ்ந்து கொண்டிருந்தவர். வள்ளியெம் பெருமாட்டியிடத்தில் முருகன் காதல் கொண்டு அவளை ஆட் கொண்ட போது அவள் அவனுக்குத் தேனும் தினைமாவும் தந்தாள். வள்ளி தினையைக் கொடுத்து முருகனை அடைந்தாள். நாமும் தினைப்போதளவு காலத்தில் நெஞ்சைக் கொடுத்து அவன் திருவருளைப் பெற முடியாதா என்ற நினைப்பு அவருக்கு வருகிறது. பின்னே முடிவாக வரும் மிக மிக உயர்ந்த தூக்கத்தைச் சொல்கிறார். முன்னே சிறிய அளவு சொல்லவேண்டிய அவசியம் வந்தவுடன் அதுவும் இறைவன் சம்பந்தமான நினைப்பாக, தினையாக வந்து நிற்கிறது. தினைப்போதளவும் ஓங்காரத்து உள்ளொளிக்குள்ளே முருகன் உருவம் கண்டு தூங்கார். தொழும்பு செய்தல் இறைவன் திருவருளில் ஈடுபட்டு தியானத்தில் புகுந்து ஓங்கார ஒளி வட்டத்திற்குள் முருகனது திருவுருவத்தைக் கண்டு தூங்கினால் போதுமா? உலகத்திற்குத் தொழும்பு செய்ய வேண்டும். தொழும்பு செய்யார். தொழும்பாவது, தொண்டு. எம்பெருமான் திருவருளினால் பலவிதமான குண நலன்களைப் பெற்று அகங்காரம் மமகாரம் அற்றுப்போய்த் தொண்டு செய்கின்ற நெறி எளிதில் வராது. உலகத்தில் உள்ள உயிர்களுக்குத் தொண்டு செய்பவன் இறைவ னுக்குத் தொழும்பு செய்தவன் ஆகிறான். கால ஜயம் அப்படி வந்துவிட்டால், - "தண்டாயுதமும் திரிசூலமும் விழத் தாக்கி உன்னைத் திண்டாட வெட்டி விழவிடுவேன்” என்று அருணகிரியாரைப் போலச் சொல்லலாம். அவர் அவ்வாறு என்ன தைரியத்தில் சொல்கிறார் என்பதை முன்பே பார்த்தோம். காலனைப் பார்த்து, ići