பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை லும் சிரமமாகக் கொள்ளாமல் இன்பமாகக் கொள்ளுகிறார்கள் மக்கள். இறைவன் திருவருளால் யாவும் நிகழ்கின்றன என்ற உணர்வு வந்த பக்தர்களுக்கு இன்பம் துன்பம் என்ற இரண்டும் வெவ்வேறு வகை நுகர்ச்சிகளாக இருக்குமேயன்றி, விரும்புவன, வெறுப்பன என்ற மாறுபட்டுணர்ச்சியைக் கொடுப்பதில்லை. அதனால்தான் திருநாவுக்கரசர், 'இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை" என்று பாடினார். இறைவன் எப்போதும் தன்னுடைய அருள் விளையாடலை நிகழ்த்தும் இடம் உலகம் என்று கொண்ட பக்தர்களுக்கு வாழ்க்கை யும் அவன் விளையாட்டில் ஒரு பகுதியாகத் தோன்றும். எல்லாரோடும் இணைந்து அன்பு வைத்துப் பழகுவார்கள். எல்லாரையுமே பக்தர் கூட்டமாகச் செய்துவிட வேண்டும் என்ற ஆசை உண்டாகும். நன்றாக வாழவேண்டும் என்ற விருப்பம் இருக்கும். தாமும் வாழவேண்டும், பிறரையும் வாழ வைக்க வேண்டும் என்ற உயர்வான எண்ணம் அவர்கள்பால் சிறந்து நிற்கும். ஆதலின் அன்பர்கள் பொருள் ஈட்டுவார்கள்; அதனைப் பிறருக்கு அளிப்பார்கள். அவர்கள் தாம் ஈட்டும் பொருளில் இறைவன் திருவருளைக் காண்பார்கள். அவர்கள் செய்யும் அறம் இறைவனுடைய அன்பிலே கசிந்து செய்வதாக அமையும். இதனால் அவர்களிடம் பொருள் பெறுகிறவர்களும் இறைவன் திருவருளுக்கு இலக்காகிறார்கள். ஏழைகளும் இறைவன் பெயரைச் சொன்னால் பிச்சை கிடைக்கும் என்ற உண்மையை இன்றும் மறப்பதில்லை. பிச்சைக்காரர்கள் இறைவன் பெயரைச் கூறி யாசிக்கிறார்கள். இந்த வழக்கத்தை இந்த நாட்டிலேதான் பார்க்கலாம். பழங்காலத்தில் அறம் செய்தவர்கள் இறைவன் நினைவோடு செய்தார்கள். இரவலர்களும் இறைவன் திருவருளை நினைப்பூட்டினார்கள். அந்த வழக்கம் இன்றளவும் இருந்து வருகிறது. - தாம் பெற்றதைப் பிறருக்குப் பகிர்ந்து கொடுப்பதனால் மக்கள் இருவகை நலங்களைப் பெறுகிறார்கள். ஒன்று பொருளின் 3