பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 தேர்தலில் எத்தனை பேர்களைப் பார்த்தோம்! 'ஐயா. காதுப் பெட்டியில் வோட்டுப் போடுங்கள். கண்ட பெட்டியில் போடா தீர்கள். உங்கள் நண்பர்களுக்கும் சொல்லுங்கள்' என்று நம்மிடம் வந்து வோட்டுக் கேட்கிறார்கள். "கடன் வாங்கிச் செலவு பண்ணி விடப்போகிறான் ஐயா. நாளைக்குக் கடன்காரன் வழக்குப் போடுவானே! வாரண்டு கொண்டுவந்து நீட்டுவானே ஜப்திக்கு அமீனா வந்துவிடுவானே! இவற்றை எல்லாம் மறந்து கடன் வாங்கிக் கொண்டிருக்கிற அவனிடம் இப்படியெல்லாம் வரும் என்று சொல்லக்கூடாதா?" என்று சிலர் சொல்கிறார்கள். இந்த மாதிரியாக அருணகிரியார் இப்போது பேசுகிறார். "நாளைக்கு யமதூதன் வந்துவிடுவானே! அவன் நம்மை இழுத்துக் கொண்டு போகிற வழியும், கொண்டு போய்த் தள்ளுகிற குழியும் சொல்ல முடியாத துன்பத்தை அளிக்குமே எரி வாய் நரகக் குழியும், கூற்றுவன் ஊர்க்குச் செல்லும் வழியும் மிக்க துயரமாக இருக்குமே! இவற்றையெல்லாம் மறந்துவிட்ட உங்கள் நண்பர்களுக்கு இவற்றைக் கொஞ்சம் எடுத்துச் சொல்லுங்கள், சொல்லுங்கள் என்று நம்மைப் பார்த்து முறையிட்டுக் கொள்கிறார். போன பாட்டிலே, "இவற்றையெல்லாம் செய்யார் என் செய்யார் யமதூதருக்கே?' என்று இரங்கி எதிர்மறை முகத்தால், "இவற்றையெல்லாம் செய்வார் யாமதுரதருக்கு அஞ்சார்' என்கிற உண்மையைப் புலப்படுத்தினார். இந்தப் பாட்டிலோ, 'இறைவன் கவியைக் கேளுங்கள். அல்லாத கவியைக் கேளாதீர்கள். இதை மறந்தவர்களுக்கு நாளைக்கு வரப்போகிற யம பயம், நரக வாதனை இவற்றையெல்லாம் எடுத்துப் பகரீர், பகரீர்” என்று சொல்வதன் மூலம், "இழிந்த கவியைக் கற்றிடாமல், இறைவன் கவியைக் கேட்பவர்களுக்கு யம பயம் இல்லை; நரக வாதனை இல்லை' என்கிற உண்மையைப் பெற வைக்கிறார். மனோலயமும் மனோநாசமும் 'இறைவன் நாமத்தைக் கேட்பதனாலே, கவியைக் கேட்டு உருகுவதனாலே எப்படி ஐயா யமனை வெல்ல முடியும்?" என்பது ஒரு கேள்வி. இறைவன் கவியைக் கேட்கும்போது காற்றைப் போலச் சுற்றிச் சுழன்றுகொண்டிருக்கிற மனம் ஒருமைப்பாடு அடைகிறது. உலகத்திலுள்ள எல்லா மதங்களும் 148