பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 பொந்தும் பறவையும் ஒரு மரப் பொந்துக்குள் பறவை ஒன்று இருக்கிறது. அதைப் பிடிக்க வேண்டுமென்றால் பறவை பறந்து போகாதபடி பொந்துக் குள் கையை விட்டு அப்படியே அமுக்கிப் பிடிக்க வேண்டும். இந்த மரமாகிய உடம்பிலோ ஐந்து பொந்துகள் இருக்கின்றன. இதற்குள் மனமாகிய பறவை ஒளிந்து கொண்டிருக்கிறது. ஒரு பொந்தின் வழியாகக் கையை விட்டுப் பிடிக்கப்போனால் வேறு ஒரு பொந்தின் வழியாக வெளியே ஒடிவிடுகிறது. இந்த ஐந்து பொந்துகளுள் ஒன்றின் வழியாகத்தான் அதைப் பிடித்தாக வேண்டும். வேறு பொந்துகள் இல்லை. என்ன செய்வது? கண்ணாகிய பொந்தை அடைத்துப் பிடிக்கலாம் என்று கோயிலுக்குச் சென்று, இறைவன் திருவுருவத்தைப் பார்த்துக் கண்ணை மூடிக்கொண்டால் அவன் திருவுருவம் மனத்தில் வர மாட்டேன் என்கிறது. வாயாகிய பொந்தை அடைக்க அயில் வேலன் கவியைப் பிழையறக் கற்றுச் சொல்லலாம் என்றால், அதற்கும் நம்மால் முடியவில்லை. வாய் சொல்லிக் கொண்டே இருக்கிறது; மனம் எங்கோ ஓடிவிடுகிறது. "ஐயோ! எங்களுக்கு வேறு வழி கிடையாதா?’ என்று அழுகிற மக்களை இரக்கத் தோடு பார்த்துச் சொல்கிறார் அருணை முனிவர். "ஆண்டலன் உங்களுக்குக் காது கொடுத்திருக்கிறான் அல்லவா? அந்தக் காதின் வழியாக மனத்தைப் பிடித்து அடக்க உபாயம் சொல்கிறேன்' என்று மற்றொரு வழி காட்டுகிறார். கவி கேட்டு உருகுதல் அன்பினால் இளகாத மனத்தைக் கல் என்பர். செறிவோடு இருக்கிற நமது நெஞ்சக் கன கல் நெகிழ வேண்டும்; உருக வேண்டும். கல்லாலான மலையையே, கிரெளஞ்ச கிரியையே, கிழித்து எறிந்த பெருமான் யாரோ அவனுடைய புகழைக் கேட் டால் நமது வன்மனப் பாறை நெக்குவிட்டுக் கிழிந்து போகும். கிழியும்படி அடல் குன்று எறிந்தோன் கவிகேட்டு உருகி !இருப்பீர் چ چي بي بي سي * * * * * * * * * * * * * * * * * * * * நாம் உருகி இருக்க வேண்டும். கேட்டு உருகி இருக்க வேண்டும். எதைக் கேட்டு உருகி இருக்க வேண்டும்? கவி 15C)