பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 ஒரு குழந்தை அழுதாலும் போதும்; அந்தச் சத்தத்தை வைத்துக் கொண்டு நூறு பாடல்களைப் பாடிவிடுவான் கவிஞன். அவன் உள்ளம் அத்தனை மென்மையானது; நுட்பமானது; சிறு சம்பவங்களையும் பிரதிபலிக்கிற ஆற்றல் அதற்கு உண்டு. கோபமாக இருக்கலாம்; தாபமாக இருக்கலாம்; அவன் உள்ளத் தின் வழியே புகுந்து வரும் போது அதுவே பெரிய காப்பியம் எழக் காரணமாகி விடுகிறது. வாழ்க்கையில் துன்பம் அளிப்பன எல்லாம் அவன் காவியத்தில் இன்பமாக இருக்கும். வாழ்க்கையும் கலையும் வாழ்க்கைக்கும் வாழ்க்கையை ஓவியமாக்கும் காவியத் துக்கும் உள்ள வேறுபாட்டைப் பாருங்கள். வாழ்க்கையில் இருப்பது நிகழ்ச்சி, காவியத்தில் இருப்பது கற்பனை. வாழ்க்கை யில் உண்டாவன சுகதுக்கங்கள்; காவியத்தில் உண்டாவது சுவை. பக்கத்து வீட்டு அம்மாளுடைய குழந்தை இறந்து போய் விட்டது. பிணத்தை வைத்துக் கொண்டு அவள் அலறுகிறாள். அங்கே சென்றால் நாமும் அழுகிறோம். இந்தத் துயரம் யாருக்கும் வரவேண்டாம் என்று நினைக்கிறோம். இந்த நிகழ்ச்சி யில் சோக உணர்ச்சி உண்டாகிறது. மயான பூமியில் தன் பிள்ளை லோகிதாசனைப் போட்டுக் கொண்டு சந்திரமதி அலறுகிறாள். இந்தக் கட்டத்தை அநுபவிக்க வேண்டுமென்று போட்டி போட்டுக் கொண்டு அரிச்சந்திர நாடகத்திற்கு ஒடுபவர்கள் எத்தனையோ பேர்கள். இது நிகழ்ச்சியன்று; கலையில் ஒரு கற்பனை. இங்கே உண்டாவது சோக நிகழ்ச்சி அன்று; சோக ரசம், அவலச் சுவை. குஷ்டரோகியைத் தொட மாட்டோம்; பார்க்கவே வெறுத்து அப்பால் போய் விடுவோம். குஷ்டரோகி வேஷம் போட்டுப் பாட்டுக் பாடி ஒருவன் நடிக்கிறான். அந்த இடத்திற்கு ஐந்து ரூபாய் டிக்கெட் என்றாலும் வாங்கிக் கொண்டு போவோம். காரணம், அங்கே குஷ்டரோகி போல நடிப்புக் காட்டி உயர்ந்த தத்துவத்தைப் புலப்படுத்துவதால், ரசமாக அந்தக் காட்சி அமைந்திருப்பதுதான். வாழ்க்கையிலுள்ள இப்படிப்பட்ட பல விதமான உணர்ச்சி களைக் கொண்டு ரசத்தை எடுத்துக் கொடுப்பவர்கள் கவிஞர்கள். கவி பாடுவதற்கு முன்பு அவர்கள் உள்ளம் மெழுகாக அந்த அந்த 152