பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருவகைக் கவிகள் உணர்ச்சிகளைக் கற்பனை செய்து நெகிழ்ந்து நெகிழ்ந்து உருகு இறது. பின்புதான் அவ்வுணர்ச்சிகளைச் சுவையாக்கிக் காப்பிய மாக வடித்தெடுத்து நம்மையும் உருகச் செய்கிறார்கள். - கவிஞனுடைய உள்ளத்திலும் ஞானப்பசியுள்ளவனுடைய உள்ளத்திலும் பார்த்தவுடன் எந்தக் காட்சியும், எந்த உணர்ச்சியும் பதிவதைப் போல வேறு யாருக்கும் பதிவது இல்லை. சீவகன் துறவு சிந்தாமணியில் ஒரு கதை. சீவகன் பொழிலுக்குச் சென்று அங்குள்ள காட்சிகளைக் கண்டிருந்தான். அங்கே ஒரு பலாமரம் இருந்தது. மரத்தில் இரண்டு குரங்குகள் இருந்தன. ஒன்று ஆண்; மற்றொன்று பெண். பெண் குரங்குக்கு ஆணின் மேல் கோபம். அதைப் போக்க அந்த ஆண் குரங்கு பலாப்பழம் ஒன்றைப் பறித்து அதைக் கீறிச் சுளைகளைப் பெண் குரங்குக்குக் கொடுத்துக் கொண்டிருந்தது. தோட்டக்காரன் அங்கே வந்து அந்தப் பழத்தைப் பிடுங்கிக் கொண்டு இரண்டு குரங்குகளையும் ஒட்டி விட்டான். இதைக் கண்ட சீவகனுக்கு ஒரு நினைவு தோன்றியது. அடடா கட்டியங்காரனிடமிருந்து நான் அரசைக் கொண்டேன். நான் வலியவனாதலால் இதனை அடைந்தேன். என்னைவிட வலியவன் வந்தால் என்னிடமிருந்து இதைப் பற்றிக் கொள் வான். இந்தச் செல்வம் யார் பலசாலியோ அவனால் வலிந்து பற்றிக் கொள்வதற்குரியது. நிலையுடைதன்று என்று எண்ணி னான். உடனே அவன் துறவியாகிவிட்டான். சின்னச் சம்பவந் தான் அது. இருந்தாலும் அவன் உள்ளத்தில் அது பெரிய மாறு தலை உண்டாக்கி விட்டது. சித்தார்த்தர் துறவு நம்மைப் போலவேதான் இந்த உலகத்தில் சித்தார்த்தர் வாழ்ந்தார். அரசராக இருந்து அரண்மனை இன்ப போகத்தில் திளைத்தார். அழகான மனைவியும் அருமையான குழந்தையும் அவருக்கு இருந்தார்கள். ஒரு நாள் வீதியில் போகும் பிணத்தைக் கண்டார். எத்னையோ பிணங்களை நாம் தினமும் பார்க்கிறோம். நமக்கு ஒரு விதமான உணர்ச்சியும் ஏற்படுவதில்லை. அதுவே சித்தார்த்தருக்கு அவரது வாழ்க்கையின் பெரிய திருப்பமாக i53