பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 மேல் அவர்களுக்குள்ள பற்று நீங்குதல். மற்றொன்று ஏழைகள் அவர்களால் பயன் அடைதல். சமுதாயத்தில் பொருள் ஓரிடத்தில் குவிவதும் மற்றோரிடத்தில் வறுமைப் பள்ளம் இருப்பதும் இயற்கை. இதை மாற்றத் தம் பொருளைப் பகுத்து உண்டு வாழ்வதைச் செல்வர்கள் மேற்கொள்ள வேண்டும். செல்வத்தைப் பகிர்ந்தளிக்கும் (Distribution of Wealth) செயலையே தர்மம், தானம் என்று சொன்னார்கள் நம் பெரியோர்கள். அறம் செய்யவேண்டும் என்பதை வற்புறுத்தினார்கள். வேறு நியாயங்களைச் சொல்லி அறம் செய்யச் சொன்னால் மக்களுக்கு எளிதில் உள்ளம் இரங்காது. இறைவன்பால் அன்பு ஏறச் செய்தால் எளிதில் ஈயும் பண்பு உண்டாகும். ஈயும் தகைமை உடையவர்களுக்கும் இறைவன்பால் அன்பு இல்லையானால் செருக்கு உண்டாகும். ஆதலின் ஈவதற்கு முன்பும் அன்பு வேண்டும்; ஈயும்பொழுதும் இறைவன்பால் அன்போடு இருக்க வேண்டும். ★ அருணகிரிநாதர் இறைவன்பால் அன்புடையவர்கள் உலகத் தில் நன்றாக வாழவேண்டும் என்று விரும்புகிறவர். அன்பர்கள் நல்லபடி வாழ்ந்தால் உலகம் முழுவதும் அவர்களால் இன்பத்தை அடையும் என்ற உண்மையை உணர்ந்தவர். ஆதலின் அறம், பொருள், இன்பம் என்ற துறைகளிலும் அறிவுரை கூறுகிறார். இந்த மூன்று திறத்திலும் இன்னது செய்யவேண்டும், இன்னது செய்யக் கூடாது என்று நல்லுபதேசம் செய்கிறார். கந்தர் அலங்காரத்தில் அறம் செய்யவேண்டும் என்பதை வற் புறுத்தும் பாடல்கள் பல பொருளை நல்ல முறையில் சேமித்து வாழ வேண்டும் என்பதைச் சொல்வன சில; நன்முறையில் இன்பம் துய்க்கும் முறையைக் குறிப்பாகப் பெற வைக்கும் இடங்கள் சில. எல்லாவிடத்திலும் இறைவனுடைய திருவருளை எண்ணும் பேரன்பு சுருதி போட வேண்டும் என்று சொல்கிறார். இந்தப் புத்தகத்தில் கந்தர் அலங்காரத்திலுள்ள ஐந்து பாடல்களுக்குரிய (50-54) விளக்கங்கள் இருக்கின்றன. இவற்றில் மூன்று பாடல்கள் ஈகையை உடம்பாட்டுமுகத்தாலும் எதிர்மறை 4