பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருவகைக் கவிகள் உருக்கம் உண்டாகும் வழி இந்த உருக்கம் எப்படி வரும்? யார் உருகிப் பாடுகிறார் களோ அவர்களுடைய பாட்டைக் கேட்டால் வரும். 'வேல் முருகா! வேல்முருகா!' என்று ஒருவர் வெறும் நாமாவளிதான் பாடுகிறார்; என்றாலும் கண்ணை மூடிக் கொண்டு அந்த நாத ஒலிக்குக் காதைக் கொடுத்து விட்டால் சிறிது நேரத்தில் நமக்கு ஒருவித உணர்ச்சி உண்டாகிறது. பாட்டு முடிந்துவிட்டால் நாம் அப்படியே செயலற்றுபோய் நிற்கிறோம். உள்ளம் உருகிப் போய் விடுவதனால் பாட்டு முடிந்ததுகூடத் தெரியாது போகிறது. அந்த உருக்கம் ஆரம்பத்திலேயே வந்துவிட்டால் பாடுகிறவர் இன்னார் என்பதுகூடத் தெரியாமல் போய்விடுகிறது. சிலருக்கு ஆவேச உணர்ச்சி பொங்கி விடுகிறது. கவிஞன் உருக்கம் மாபெருங் கவிஞனுடைய பாடல்கள் இப்படித்தான் எந்தக் காலத்திலோ, எந்த இடத்திலோ, தனக்கு உண்டாக்கிய உருக் கத்தை, வேறு வேறு காலத்தில்,வேறு வேறு இடத்தில், வேறு வேறு வேறு அநுபவத்தை உடைய மக்களிடத்தில் உண்டாக்கு கின்றன என்பர். உணர்ச்சியின் இடமாற்றந்தான் கலையின் தத்துவம் என்பார்கள். இறைவனை நினைந்து உருகிப் பாடின பெரியவர்கள் பாட்டை எப்பொழுதானாலும் திரும்பத் திரும்பப் படிக்கிறவர்களுக்கு அதே உருக்கம் உண்டாகும். 'திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்: என்று ஒரு பழமொழி உண்டு. அதற்கு ஏன் உருகுகிறார்கள்? திருவாசகம் பாடியவர் உருகி உருகிப் பாடினார். அவரது உள் உருக்கத்திலிருந்து வெளிப்பட்ட பாடல்கள் நம்மையும் உருக வைக்கின்றன. நல்ல நிலத்திலே வித்து விழுந்தால் உடனே அது முளைத்து மரமாகும். அந்த மரத்தில் மறுபடியும் ஆயிரம் ஆயிரம் வித்துக் கள் உண்டாகும். அப்படி உருக்கமாகிய ஆதிவித்து மாணிக்க வாசகரின் உள்ளமாகிய நல்ல நிலத்தில் விழுந்தது. அந்த வித்தில் தோன்றியது மரமாகிய திருவாசகம். அந்தத் திருவாசக மரத்தில் மீட்டும் ஆயிரம் ஆயிரம் வித்தாகிய உருக்கமே விளைகிறது. ஒரு 155