பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 வருடைய உருக்கம் பலரிடம் உருக்கத்தை உண்டாக்குகிறது. மு: லில் உருகிப் பாடியவர் ஒருவர். அவர் பாட்டைப் படிக்கிறவர்கள் எல்லாரும் பின்னால் உருகுகிறார்கள். கலைஞன் மனோபாவம் நான் ஒரு தலத்தில் உள்ள முருகன் கோயிலுக்குச் சில நண்பர்களுடன் சென்றிருந்தேன். கோயிலின் மேல்விதானத்தில் ஒரு சித்திரகாரர் அழகான வண்ணங்களை எல்லாம் குழைத்து: கந்தபுராணக் கதையை ஒவியமாகத் தீட்டியிருக்கிறார்; ஆறு படை வீட்டையும் எழுதியிருக்கிறார். சித்திரத்தைப் பார்த்துக்கொண்டே வரும்போது என்னுடன் வந்தவர்களில் ஒருவர், "சித்திரம் எப்படி இருக்கிறது? எப்படி இருக்கிறது?" என்று கேட்டுக் கொண்டே வந்தார். நான் விடை ஒன்றும் சொல்லாமல் அண்ணாந்து பார்த்துக் கொண்டே சென்றேன். எங்களுக்கு முன்னால் வேறு சிலரும் அந்தப் படங்களைப் பார்த்துச் சென்றார்கள். அவர்களிலே ஒருவன் வள்ளியெம்பெருமாட்டியின் படத்தைப் பார்த்துவிட்டு, 'இது இன்னவள் மாதிரியாக இல்லையா?" என்று ஒரு சினிமா நடிசை யின் பெயரைச் சொன்னான். அப்படியே மற்றப் படங்களையும் பார்த்துக் கூறினான். உடனே நான் பக்கத்தில் இருந்தவர்களிடம் "படம் எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொண்டீர்களா? என்று சொன்னேன். அவர்கள் விழித்தார்கள். - இறைவனை, நினைந்து நினைந்து உருகி அப்படத்தை ஒவியன் தீட்டியிருந்தால் அந்தப் படத்தைப் பார்க்கும்போது பார்க்கிறவர்களுக்கு இறைவனின் நினைப்பு உண்டாகும். ஆறு முகக் கடவுளின் படம் போட்டிருக்கிறேன் என்று எதையே நினைத்துக் கொண்டு ஆறுமுகங்களுடையஒர் உருவத்தைத் தீட்டி விட்டால், அந்தச் சித்திரம் ஆறுமுகநாதனை நினைக்கச் செய்து விடாது. உள்ளத்தில் பல காலம் நினைந்து நினைந்து உருகினால் அன்றி எழுத வராது. வெறும் பழக்கத்தினால் எழுத வராது. எம் பெருமானுடைய மூர்த்தத்தைக் கண்ணால் காணவேண்டும், கருத்தைச் செலுத்தி உள்ளம் உருக வேண்டும். உருகி உருகிக் கண்ணை மூடிக் கொண்டு உள்ளக்கிழியில் அவன் திருவுரு வத்தை முதலில் எழுதிக் கொள்ள வேண்டும். அப்படி எழுதிக் கொண்டு உருகுகிறவனுக்கு உடம்பெல்லாம் கிளுகிளுக்கும்; 156