பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 தலையை அப்பால் திருப்பியவுடன்தான் தலை விண்டு உயிர் போயிற்றாம். குண்டு போட்டால் சத்தம் கேட்கும். இப்படிக் கத்தியினால் கிழித்தால் சத்தமா உண்டாகும்? சத்தம் இல்லா மல், ஆடம்பர ஆரவாரம் இல்லாமல் கணப்பொழுதில் ஆண்ட வன் கிரெளஞ்சகிரியை சங்காரம் செய்ததை நினைந்து, "கிழியும் படி அடற்குன்று எறிந்தோன்' என்று சொல்கிறார். அருணகிரி நாதர் அவ்வப்போது தம் கற்பனைக் கண்ணால் காணும் காட்சிகளில் இது ஒன்று. கிழியும்படி அடல் குன்று எறிந்தோன் கவிகேட்டு உருகி SS S C C C C S C C C C S S S C C C S S S S S S S S S S S S S S CC SS SS SS இருப்பீர் அடல் - வலிமை. "வலிமை பொருந்திய கிரெளஞ்ச மலை கிழியும்படியாக வேலை எறிந்த வேலாயுதனுடைய கவியை, அவன் புகழ்பாடும் கவிகளை, கேட்டு உருகுங்கள்” என்கிறார். கருத்து இணைதல் நமக்குக் கருத்து இருக்கிறது; முருகப் பெருமானைப் பற்றிப் பாடியுள்ள அநுபூதிமான்களின் பாடல்களில் பொருள் உண்டு. நம் கருத்தையும் அந்தப் பொருளையும் ஒன்றாகச் சேர்த்தோமானால் உருக்கம் உண்டாகும். சொற்பாவும் பொருள் தெரிந்து கற்றால் உள்ளத்தின் ஒவ்வொரு பகுதியிலும் கிளர்ச்சி உண்டாகும். வெறும் ஒலிக்கே எத்தனையோ பெருமை உண்டே! தன் வீட்டு வாசலில் ஒரு தாய் நின்றுகொண்டிருக்கிறாள். தெருவோடு போகிறவன் ஒருவன், 'அந்தக் கார்ப்பரேஷன் பள்ளிக்கு எதிரில், ஒரு குழந்தையின் மேல் கார் ஏறிவிட்டது” என்று யாரிடமோ சொல்லிக் கொண்டு போகிறான். அவளிடம் அவன் சொல்லவில்லை. அவன் பேச்சு அவள் காதில் விழுகிறது. உடனே அந்தப் பள்ளி வாசலை நோக்கி ஓடுகிறாள். காரணம்: அவளுடைய பிள்ளை அந்தப் பள்ளியில்தான் படிக்கிறான். 'நம்முடைய குழந்தை வீதிக்கு வந்திருப்பானோ? நம் குழந்தை யின் மேல் கார் ஏறியிருக்குமோ?' என்று பல பல சிந்தனை யுடன் கூடிய கிளர்ச்சியுடையவளாக, பதற்றத்தோடு அந்தப் பள்ளிக்குப் போகிறாள். அந்தக் கிளர்ச்சிக்குக் காரணம் என்ன? அவள் பிள்ளை இறக்கவில்லை. அவன் வகுப்புக்குள்தான் இருக்கிறான்.; பாடம் நன்றாகக் கேட்டுக்கொண்டிருக்கிறான். i58