பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 ஊரிலேயே ஒரு டீக்கடையும் இருக்குமே! அங்கே சினிமாப் பாடல்கள் இரவு பகலாக ஒலித்துக் கொண்டிருக்கும். அவற்றை யும் கேட்கலாமா? கிளெஞ்ச மலையைக் கிழித்த வேலாயுத னுடைய கவியைக் கேட்டு உருகி இருங்கள் என்று சொன்ன அருணை முனிவர் அடுத்த அடியில், இழியும் கவி கற்றிடாது இருப்பீர் என்றும் சொல்லித் தருகிறார். இது இரண்டாம் பயிற்சி. மருந்தும் பத்தியமும் நாட்டு வைத்தியர்களிடம் எனக்கு நோய் என்று சொல்லிக் கொண்டு சென்றால் அவர்கள் மருந்து கொடுப்பார்கள். கூடவே இன்னவாறு பத்தியமாக இருக்க வேண்டும் என்றும் சொல் வார்கள். பத்தியம் என்பது சில உணவுப் பொருளை அகற்றுவது. மருந்து சாப்பிட்டால் பத்தியம் இருக்கத்தான் வேண்டும். நாக்கு ருசிக்காகக் கண்டதைச் சாப்பிடாமல் இருந்திருந்தால் நோய் வந்திருக்காது. நோய் போக வேண்டுமென்றால் மருந்து சாப் பிடத்தான் வேண்டும்; பத்தியமாக இருக்கவும் வேண்டும். மருந்து சாப்பிடும்போதே நாக்கு ருசிக்காகக் கண்டதைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தால் நோய் தீருமா? மருந்தும் பத்தியமும் சரிவர இருந்தால் உடம்பு விரைவில் நலம்பெறும். - எம்பெருமானின் புகழ் அல்லாத பல கவிகளைக் கேட்டு நோயை வருவித்துக் கொண்டுவிட்டோம். பிறவி நோய் போக வேண்டும். பிறவிப் பிணிக்கு மருந்தாக இறைவனுடைய புகழைச் சொல்லும் கவி கேட்டு உருக வேண்டும். மருந்து உண்டால் பத்தியம் வேண்டுமே இறைவனுடைய புகழைக் கேட்கும்போதே, மட்டமான பாட்டுக்களை மற்றொரு புறம் கற்காமல் இருந் தால்தான் விரைவில் மனம் வளப்படும்; ஒருமைப்படும். இழிந்த பாட்டுக்களைக் கேட்டால் அகந்தை வளரும்; ஆபாசமான உணர்ச்சிகள் ஊற்றுப் போலச் சுரக்கும். அருமையான ஒன்றை வளர்க்கும்போது கூடவே அதை அழிக்கக் கூடிய ஒன்றையும் வளர்க்கலாமா? வளர்க்காதீர்கள் என்பதைச் சொல்கிறார் அருண கிரிநாதர். இழியும் கவி கற்றிடாது இருப்பீர். 16O.