பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருவகைக் கவிகள் நிலை. இந்த நிலைக்குப் போகக் கூடாது என்கிற எண்ணம் வளர வேண்டுமானால் இதைப்பற்றிய பயம் உண்டாக வேண்டும். ஆகவே தான், நரகம் ஒரே தீக்குழியாக இருக்கும்; கொழுந்து விட்டெரியக் கூடிய அந்த எரிவாய் நரகக் குழியில் யம தூதர்கள் பாவம் செய்கிறவர்களைக் கொண்டு போய்த் தள்ளுவார்கள்' என்று சொல்லிப் பயத்தை உண்டாக்கினார்கள். அந்த இடம் கூற்றுவனுடைய ஊர். கூற்றுவனுடைய ஊர் மாத்திரம் அப்படி இராது. ஊருக்குப் போகும் வழியும் துயரம் நிரம்பியது. அந்தப் பக்கம் போகும் உயிர்கள் எல்லாம் வெப்பத் தால் தீய்ந்து, தாகத்தினால் தவிக்கும் என்றார்கள். அதற்காகத்தான் யாராவது இறந்து போனால் அவருடைய உயிர் யமபுரிக்குச் செல்லும் வழியில் விடாய்ப்பட்டுத் துயருறுமே என்று எண்ணி எள்ளும் தண்ணிரும் விடுவார்கள். அவ்வுயிரினுடைய தாகத்தைத் தீர்ப்பதற்காக என்று சொல்வார்கள். வெம்மையினால் ஏற்படுவது விடாய்; வெம்மை தீயினால் உண்டாகிறது. தண்மை, குளிர்ச்சி; அது நீரினால் உண்டாகிறது. உள்ளத்திற்குக் குளிர்ச்சியைத் தருவது அன்பு. அன்பு இல்லாத உயிருக்கு அன்பு இல்லாத நிலைதான் வரும். அன்பு இல்லாத சுயநலக்காரர்களுக்குக் கடைசிப் பயணத்தில் கிடைக்கிற வெப்பம் நிறைந்த வழியையும், தீக்குழியையும், அவற்றினால் உண்டாகிற துயரையும் அருணகிரியார் நினைப்பூட்டுகிறார். உருகும் கவி கேளாதவர்களுக்கு, இழியும் கவி கற்பவர்களுக்கு, இந்தக் குழியை யும், வழியையும், துயரையும் சொல்லுங்கள், சொல்லுங்கள் என்று வேண்டிக் கொள்கிறார். எரிவாய் நரகக் குழியும் துயரும் விடாய்ப்படக் கூற்றுவன் ஊர்க்குச் செல்லும் வழியும் துயரும் பகரீர் பகரீ மறந்தவர்க்கே. பகரீர் பகரீர்! நல்ல வினைகளைச் செய்யாவிட்டால் மீட்டும் பிறவியாகிய துன்பந்தான் விளையும் என்பது தெரியாமல், உருகும் கவி கேளாது, இழியும் கவி கற்று வருபவர்களுக்கு, 'எரிவாய் நரகக் குழி காத்து இருக்கிறது. விடாய்ப் படும் துயரும் காத்து இருக்கிறது. 163