பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 கூற்றுவன் ஊர்க்குச் செல்லும் வழியையும் நினைவில் கொள்ளுங் கள் என்று ஒருமுறை பகர்ந்து நினைப் பூட்டினால் போதும். அவர்கள் இயல்பாகவே தெரியாதவர்கள். அவர்கள் இதைத் தெரிந்து கொண்டு நல்ல நெறியில் நடக்க முயல்வார்கள். பகரீ பகரீ மறந்தவர்க்கே. உருகும் கவி கற்றிடாது, இழியும் கவி கற்றுக் கொண் டிருப்பதனால் நரகந்தான் விளையும், மீட்டும் பிறவியாகிய துன்பம் உண்டாகும் என்பதை உணர்ந்தும் மறந்து விடுகிறார் களே அவர்களுக்கு, "பாவிகளே எரிவாய் நரகக் குழியும் வழியும் இருக்கின்றன, இருக்கின்றன என்று அடுத்தடுத்து இடித்துச் சொல்ல வேண்டும் என்கிறார் அருணகிரியார். பகரீர், பகரீர் என்று இரண்டுமுறை சொல்கிறார். இரண்டு முறை என்று கணக்காகச் சொல்லவில்லை. தமிழில் ஒன்றுக்குமேல் போனால் எல்லாம் பலவே. ஆதலில் அடுத்தடுத்துச் சொல்லுங்கள் என்பதையே அவ்வாறு கூறினார். உண்மையைத் தெரிந்து கொண்டும் மயங்கு கிறவர்களுக்கு அடித்துச் சொல்லத்தானே வேண்டும்? முரண்பாடு இல்லை மனிதன் உய்வுபெற வேண்டுமென்றால் நல்ல உணர்ச்சி அதிகம் உடையவனாக இருக்க வேண்டும்; அல்லாத உணர்ச்சி கொஞ்சங்கூட இருக்கக்கூடாது. மனம் நல்ல உணர்ச்சியினால் கிளர்ந்து உருகினால் இறைவன் திருவருளால் தியான சமாதி நிலை கூடிவிடும். யமவாதனை இராது. காலனை வென்று விடலாம். காலஜயம் பண்ணுவதற்கு மனோநாசம் ஏற்படவேண்டும். மனோநாசம் ஏற்படுவதற்கு முதல் நிலை மன உருக்கம். மனம் உருகினால்தான் ஒருமைப்பாடு உண்டாகித் தியானம் செய்ய முடியும். மனோலயம் உண்டாகும்; இதற்கு ஆரம்பம்: இழிந்த கவியைக் கற்றிடாது ஒதுக்கி, உயர்ந்த கவியை - மனத்தை உருக்கும் வேலாயுதன் கவியைக் கேட்டு உருக வேண்டும். இந்த அரிச்சுவடி படித்தால் போதும்; எம்.ஏ. பட்டம் பெறும் கல்லூரி நிலையாகிய ஆங்காரம் அடங்கி, ஒடுங்கிப் பரமானந்தத்தே தேங்கி, நினைப்பும் மறப்பும் அற்று, ஓங்காரத்து உள்ளொளிக் 164