பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை முகத்தாலும் வற்புறுத்துகின்றன. "ஏற்றவர்க்கு இலையாயினும் வெந்தது ஏதாயினும் பகிர்ந்து அளித்து மாதவம் செய்குமினோ” என்று அறிவுரை கூறுகிறார். இது விதிமுகத்தால் அறத்தை வற்புறுத்தியது. அவ்வாறு பகிர்ந்து அளிப்பது மட்டும் போதாது; அதனை இறைவனுடைய நினைவோடு செய்யவேண்டும் என்று கூறுகிறார். அற நூலாசிரியர்களிடம் காணாத இயல்பு இது. அருணகிரிநாதர் இறைவனிடம் அன்பு பூண்டவர். அந்த அன்பினால் அறம் பன்மடங்கு பலிப்பதை அவர் கண்டார். அறநூலார் ஏற்றவர்க்கு ஈயுங்கள் என்றனர். அருணகிரிநாதர், மலைஆறு கூறெழ வேல்வாங்கி னானை - வணங்கி அன்பின் - நிலையான மாதவம் செய்குமினோ..... இலை.ஆயினும் வெந்தது ஏதாயினும்பகிர்ந்து ஏற்றவர்க்கே என்கிறார். அவர்கள் பால் கொடுக்கிறார்கள். இவர் அதில் கொஞ்சம் சர்க்கரையும் சேர்த்திருக்கிறார். வெறும் பாலைக குடிக்கத் தயங்கும் குழந்தைக்குச் சர்க்கரை போட்ட பால் அந்தத் தயக்கத்தைத் தீர்க்கும் அல்லவா? வேறு இரண்டு பாடல்களில் ஈகையை எதிர்மறைமுகத்தால் குறிப்பிக்கிறார்; அதாவது ஈயாமையால் வரும் தீங்குகளைச் சொல்கிறார். - 'தம்மிடம் பொருள் உள்ள போதே அதனை வறியவர் களுக்குக் கொடுக்காதவர்கள் தாம் தேடிய பொருளை இழந்து வாடுவார்கள் என்று ஒரு பாட்டில் பாடுகிறார். உள்ள போதே கொடாதவர் பாதகத்தால் தேடிப் புதைத்துத் திருட்டிற் கொடுத்துத் திகைத்திளைத்து வாடிக் கிலேசித்து வாழ்நாளை வீனுக்கு மாய்ப்பவரே. . இந்தப் பாட்டில் ஈயாமையின் தீய விளைவைச் சொன்னாலும் இதனுடே எப்படி ஈயவேண்டும் என்பதும் மறைந்து நிற்கிறது. தேடிப் புதைக்காமல் உள்ள போதே கொடுக்க வேண்டும் என்ற 5