பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 துறவிக்கு எதற்கு ஐயா பணம்? இந்தக் காலத்தில் எந்தச் சாமியார்தாம் பத்துப் பதினைந்து எனப் பணம் முடிச்சுப் போட்டு வைத்துக் கொள்ளாமல் இருக்கிறார்: இவர்கள் உண்மைத் துறவி களா?' என்று சிலர் கேட்கிறார்கள். நம்முடைய பணம் சந்நியாசி களுக்கும் உரியது என்கிற நினைவு நமக்கு இல்லை. அவர்கள் எதாவது வைத்துக் கொண்டிருந்தால், 'அவர்களுக்கு எதற்குப் பணம்?' என்று கேட்கிறோம். "சந்நியாசிகளுக்கு எதற்கு உடம்பு): என்று கேட்கிறோமா? நம்மைப் போல அவர்களுக்கு உடம்பு இருப்பதனாலே வயிறும் இருக்கிறது. வயிறு இருப்பதனாலே பசி இருக்கிறது. பசித்தால் உண்ண வேண்டும். உணவுக்குப் பணம் வேண்டாமா? அவர்கள் வயிற்றுக்கு வேண்டிய உணவை அன்றாடம் இல்லறத்தான் கொடுத்துவிட்டானேயானால் அவர் களுக்குப் பணம் வேண்டாம். இல்லறத்தான் சந்நியாசிகளுக்குத் தானும் உணவு படைக்காமல், அவர்களும் பணம் வைத்துக் கொள்ளக் கூடாது என்று சொல்வதைக் காட்டிலும், அவர்கள் வயிற்றை வைத்துக் கொண்டிருக்கக்கூடாது என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும். அப்படி எவனாவது சொல்வானா? சொன்னால் முட்டாள் பட்டம் கட்டிக் கொள்வான். உண்ணும் நேரம் இந்தக் காலத்தில் சந்நியாசிகளுடைய வயிற்றுக்குச் சோறு போடாவிட்டாலும், சம்பாதிக்கும் ஆற்றல் இல்லாத குழந்தை களுக்குச் சோறு போடாது பிச்சை எடுக்க வெளியே விரட்டி னாலும், தம்முடைய வயிற்றுக்குச் சோறு போடாமல் இருப்பவர் யாரும் இல்லை. 'வயிறு நிரம்ப நான் மூன்று வேளையா சாப்பிடுகிறேன் எனறு பலர் சொல்லலாம். ஒரு வேளையாவது ஒரு பிடி சோறாவது சாப்பிடுகிறான் அல்லவா? "அந்த ஒரு பிடியைச் சாப்பிடும் போதாவது அதை நமக்குக் கிடைக்கும்படி செய்த இறைவனை நினைக்க வேண்டாமா?" என்று சொல்வாரைப் போல அருணகிரியார் பாடுகிறார். * : * 'இறைவனை நினைப்பதற்கு எனக்கு நேரமே இல்லையே! கொஞ்சங்கூட ஒய்வு இல்லாமல் இயந்திரமாக வேலை செய்து கொண்டிருக்கிறேனே! என்று சொல்பவனுங்கூட வயிற்றுக்குப் போட்டுக் கொள்ள ஒரு நேரம் வைத்திருக்கிறான் அல்லவா? 168