பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 கொளுத்திவிட்ட பின்பே சாப்பிடுவது என்று கங்கணம் கட்டிக் கொண்டவர்களைப் போலத் தோன்றுகிறது அவர்கள் செயல்| பிடி சாம்பலும் இல்லை பல காலமாகப் பல பல சுவையுள்ள பண்டங்களைப் போட்டு வளர்த்த உடம்பு கடைசியில் எப்படி ஆகிறது? வறட்டிச் சாம்பல், விறகுச் சாம்பலோடுகூடச் சாம்பலாகி விடுகிறது. இந்த உடம்புச் சாம்பல் நிறைய மலைபோல் இருக்குமா? அஸ்தி கரைக்கும் தினத்தன்று மயானம் சென்று சிதையை விலக்கினால் உடம்புச் சாம்பல் பிடியளவு கிடைப்பதுகூடக் கஷ்டமாக இருக் கிறது. ஒரு பிடி சாம்பலும் காணாத மாய உடம்பு இது. வெயிலுக்கும் மழைக்கும் பாதுகாப்பான இடத்தில் இருக்க வீடு கட்டுகிறோம். கட்டின வீட்டை சுத்தமாகவும், ஆரோக்கிய மாகவும் வைத்துக் கொள்ள வேண்டியதுதான். அந்த வீடு சாசுவத மாகவே இருக்குமா? நில நடுக்கம் வந்தால் எல்லா வீடுகளும் அப்படியே பொடிப் பொடியாக விழுந்து விடுகின்றன. அந்த வீட்டையே நம்பி வாழ்ந்தால் என்ன செய்வது? இந்த உடம்பு நமக்கு உரியதுதான். உடம்பைக் கொண்டு தான் வாழ வேண்டும். ஆற்றல் உடையவன் அதை நன்றாக வைத்துக் கொள்வான். ஆனால் இந்த உடம்பையே நம்பி இருக்கிற நிலை வந்துவிட்டால், நாளைக்குக் காலன் வந்து இதைச் சாய்த்து விடுவானே உடம்புக்குள் உயிர் இருக்கிறது. உடம்பை விட்டு எளிதில் உயிர் வெளிப்படுவதற்கு விரும்ப வில்லை. ஆயினும் வெளிப்படாமல் இருப்பதற்குரிய ஆற்றல் அதற்குக் கிடையாதே உயிரை வெளியே விடாது கட்டி வைத் திருக்கும் ஆற்றல் உடம்புக்குத்தான் உண்டா? தன்னைப் பாது காத்துக் கொள்கிற தன்மை இல்லாத உயிருக்குப் பாதுகாப்பாக - நாம் உடம்பை வளர்த்துக் கொண்டிருக்கிறோம். உயிர் போன பிறகு இந்த உடம்பினால் என்ன பயன்? - 蜘 பிராணிகளுடைய மாமிசத்தைச் சாப்பிடுகிறவர்கள் இருக் கிறார்கள். ஆனால் மனித உடம்பின் மாமிசத்தை யாரும் சாப்பிடு வதில்லை. "புலையனும் விரும்பாதஇப் புன்புலால் யாக்கை' 17O