பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபிடி சோறு ராப்பிடுங்கள்; இந்த இரண்டுக்கும் இடையில் இறைவனை தினைந்து கொடுக்கவும் கொடுங்கள். நன்றாக இறைவனை நினைந்து ஈட்டி, இறைவனை நினைந்து கொடுத்து, இறைவனை நினைந்து சாப்பிட்டு, இறைவனை நினைந்து சுகமாக அமைதி பாக இருங்கள்' என்று அருணகிரியார் சொல்கிறார். நாம் சுகமாக வம், அமைதியாகவும் சம்பாதித்துச் சாப்பிட்டு இருக்கத்தானே விரும்பிகிறோம்? இறைவன் நினைவினால் வரும் நலம் இறைவனை நினைந்து வாழாதவர்களுக்கு வாழ்வில் துக்கம், அவநம்பிக்கை, சோர்வு எல்லாம் உண்டாகின்றன. ஒருமூட்டை அரிசி வாங்கிப் போடுகிறோம். 'உடம்பு நிலையாமையை உணராது வாங்கிப்போட்டேன்' என்று நினைக்கலாமா? நாம் உயிரோடு இருந்தால் சாப்பிடுகிறோம்; இல்லாவிட்டால் இன் னொருவன் சாப்பிடுகிறான். இந்த நம்பிக்கையாகிய அடிப் படையில்தான் வாழ்வு வளம்பெறுகிறது. - 'உடம்புக்குள் நாமாகவா உயிரை வைத்துக் கொண்டோம்? உடம்புக்குள் உயிர் தங்கும்படியாகச் செய்தவன் ஆண்டவன். உண்ண வாயும், கேட்கக் காதும், சுவைக்க நாவும் தந்தவன் அவன். தொழில் செய்யக் கை கொடுத்திருக்கிறான். கண்களுக் குள் விழி கொடுத்து அவற்றை இமையாக இருந்து காப்பாற்று கிறான். மூச்சுக் காற்றாக இருந்து காப்பாற்றுகிறான். தங்குவதற்கு மண்ணாக, பருக நீராக, சுவாசிக்கக் காற்றாக இருப்பவன் அவன் தான். தொழில் செய்ய அறிவாக இருப்பவனும் அவனே. என்னுடைய முயற்சியால் நான் வாழவில்லை. அவன் அருளால் அல்லவா வாழ்கிறேன்?' என்கிற நினைப்பு நமக்கு வருமானால் வாழ்வில் தோன்றும் சோர்வும், அவநம்பிக்கையும் போய் விடும். நம்பிக்கையும், புத்துணர்ச்சியும் உண்டாகும். துன்பம் வந்தாலும், இன்பம் வந்தாலும் கலக்கமில்லா உள்ள உறுதியோடு நிலைத்து நிற்கும் ஆற்றல் உண்டாகும். எந்தத் துன்பமானாலும் சரி, இன்பமானாலும் சரி, கவலை இல்லாமல் இருக்கும். கிழக்குக் கும் மேற்குக்கும் வித்தியாசம் இராது. கறுப்புக்கும் சிவப்புக்கும் வேறுபாடு இராது. கசப்புக்கும் இனிப்புக்கும் மனம் ஒன்றாகவே இருக்கும்.இந்தச் சமநிலை உள்ளம் படைத்துவிட்டவனுக்குத் 37/3