பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 நீதி இதில் புலனாகிறது. அப்படிக் கொடுக்கும்போது எவ்வாறு கொடுக்க வேண்டும் என்பதைச் சொல்கிறார். அருள்நூற் பாவலர் அறத்தைக் கூறும் முறை அது. வேடிச்சி கொங்கை விரும்பும் குமரனை மெய்யன்பினால் பாடிக் கசிந்து உள்ளபோதே கொடாதவர் என்பதில், இறைவனைப் பாடி மெய்யன்பினால் கசிந்து கொடுக்க வேண்டும் என்ற சர்க்கரைப் பகுதி இருக்கிறது. தளர்ந்தவர்களுக்கு ஈவதுதான் ஈகை என்பதும், அப்படி ஈவதற்கு இறைவன் திருவருள் தூண்டுதல் வேண்டும் என்றும் மற்றொரு பாட்டில் சொல்கிறார். தளர்ந்தவர்க்கு ஒன்று ஈகைக்கு எனைவிதித் தாய்இலையே! jk "நான் உன்னுடைய புகழை உள்ளத்தில் நினைந்து போற்று வேன். யமன் வரும்போது என்னை நீ அஞ்சல் என்று வந்து காப்பாற்ற வேண்டும்' என்று ஒரு பாட்டில் முருகனிடம் விண்ணப்பித்துக் கொள்கிறார். இதுவே இந்தப் புத்தகத்தில் முதல் பாட்டாக இருக்கிறது. இறைவன் புகழைப் படித்து உள்ளத்தே வைத்துப் போற்றுவதனால் உள்ளம் இறைவனுடைய நினைவிலே மிதக்கும்; அதனால் கோழைத்தன்மை நீங்கி இறைவன் திருவருள் துணை செய்யும் என்ற உறுதி உண்டாகும். அந்த நெஞ்சத் திண்மையினால் கூற்று வெகுண்டு வரினும் மாற்றும் ஆற்றல் உண்டாகிவிடும். வேறு ஒரு பாட்டில் வேல், சேவல் என்பவற்றைச் செந் தமிழால் பாடும் ஆர்வத்தை அருளவேண்டும் என்று வேண்டு கோள் விடுக்கிறார். அப்படிச் சொன்ன பாட்டில் மிகுதியாக வட சொற்களை அடுக்கி வைத்திருக்கிறார். தமிழ், வடமொழி இரண்டினிடமும் அவருக்குள்ள ஆற்றலையும் அன்பையும் இப்பாடல் வெளியாக்குகிறது. திருப்புகழில் பல பாடல்களில் வடமொழிச் சொற்களும் தொடர்களும் விரவி வருகின்றன.