பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபிடி சோறு என்று நினைந்து கொடுக்க வேண்டும். இல்லையெனில் கொடுப் பதாகிய செயலை அடுத்தே நமக்கு ஆணவம் விளைந்துவிடும்; நான் கொடுக்கிறேன்' என்ற நினைவு இன்றி, அவன் கொடுக் கிறான்; எல்லாம் அவனுடைய பொருள். அவன் என்னிடம் கொடுத்து வைத்தான்; இப்போது வாங்கிப் போக ஆள் அனுப்பி யிருக்கிறான். அவனுடைய பொருளை அவன் அனுப்பிய ஆளிடம் கொடுக்கும் கருவி நாம் என்று நினைந்து கொடுக்க வேண்டும். முன்பு ஒர் இடத்திலேயும், 'வையிற் கதிர்வடி வேலோனை வாழ்த்தி, வறிஞர்க்கு என்றும் நொய்யிற் பிளவள வேனும் பகிர்மின்கள்" என்ற அலங்காரத்தில் வந்ததைப் பார்த்தோம். நான் என்கிற அகங் காரம் மாற, அவன் கொடுக்கிறான் என்கிற நினைவும், 'என்னுடைய பொருளைக் கொடுக்கிறேன் என்கிற மமகாரம் சிதைவு பெற, அவனுடைய பொருளைக் கொடுக்கிறேன் என்கிற நினை வும் இருக்க வேண்டும். அதற்காகவே, 'வையிற் கதிர்வடி வேலோனை வாழ்த்திக் கொடுக்க வேண்டும்' என்று அங்கேயும் சொன்னார். சிலர் கோயிலுக்குச் சென்றால் நாமம் நட்சத்திரம் எல்லாம் சொல்லி ஆண்டவனுக்குத் தம் பேரில் அருச்சனை செய்யச் சொல்வார்கள். வேறு சிலர், "ஆண்டவன் பெயருக்கே அர்ச்சனை செய்யுங்கள்' என்று குருக்களிடம் சொல்வார்கள். இதற்குக் காரணம் என்ன? இறைவனை வழிபடுவதே நாம் நம்மைப் பற்றிய நினைவை மறக்கத்தானே? அப்படியிருக்க ஆலயத்திலும் நம்முடைய நினைவுதானா முந்தவேண்டும்? எல்லாம் இறைவன் செயல்தான். இறைவன் பெயருக்கே பண்ணட்டும்' என்கிற நினைப்பே காரணம். அறம் செய்வதனால் மனிதனுக்கு ஏற்படுவது புகழ். "ஈவார்மேல் நிற்கும் புகழ்" என்று வள்ளுவர் சொல்கிறார். உலகத்தில் எல்லாப் புகழையும் விடக் கொடுப்பார் மேல் சாருகிற புகழ்தான் சிறந்த புகழ். இந்தப் புகழ் அகங்காரத்தை விளைவிப்பதற்கு வித்தாகப் போய்விட்டால் ஆன்ம இன்பம் கிடையாது. 179