பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 மாலையைக் கழற்றி வைத்தல் நம்மைப் பேச அழைக்கிறார்கள். நாம் பேசுகிறோம். நம்மைப் பாராட்டி மாலை இடுவது கூட்டத்தை அமைத்த நிர்வாகிகளுடைய கடமையாக, தங்கள் நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்ளும் செயலாக இருக்கிறது. ஆகா! நம்மைப் பாராட்டி மாலை சூட்டினார்கள் என்று நாம் நினைத்து அந்த மாலையை அப்படி வைத்துக் கொண்டா இருக்கிறோம்? உடனே கழற்றிப் பக்கத்தில் வைத்து விடுகிறோம். இதைப்பற்றி ரசமான நிகழ்ச்சி ஒன்று நினைவுக்கு வருகிறது. திருப்புகழ் மணி அவர்கள் ஒரு கூட்டத்தில் தலைமை வகித்தார். பேச வந்த ஒருவர் தமக்கு மாலை போட்டவுடன் கழற்றி வைக்கவில்லை; அதோடு அந்த வழக்கத்தைக் கண்டிக் கும் முறையில் பேசினார். 'நல்ல மாலையைப் பாராட்டிப் போடுகிறார்கள். அந்த மாலையை உடனே எதற்காகக் கழற்ற வேண்டும்? அது அவமதிப்பு ஆகாதா?’ என்று சொன்னார். அதற்குத் திருப்புகழ் மணி பதில் கொடுத்தார். "அவர்கள் தங்க ளுடைய மரியாதையைக் காட்ட மாலை போட்டார்கள். அவர் கள் மரியாதையை நான் என் தலையை வளைத்து ஏற்றுக் கொண் டேன். அந்த மரியாதைக்கு உண்மையில் தகுதி உடையவன் நான் அல்ல என்கிற நினைவு வந்தது. உடனே கழற்றி வைத்து விட்டேன்' என்றார்கள். புகழும் செருக்கும் தர்மம் செய்யும்போது மற்றவர்கள் தர்மம் செய்வானைப் புகழ்வார்கள். அது அவர்களுடைய நன்றியுண்ர்ச்சியைக் காட்டு கிறது. ஆன்ால் அந்தப் புகழை அப்படியே நாம் ஏற்றுக் கொண்டு செருக்கினால் தலைதருக்கி அலையலாமா? உடனே, 'எம் பெருமானே! இந்தப் புகழ் எல்லாம் உன்னுடையது அல்லவா? பிறருக்குக் கொடுக்க என்னிடம் பொருளை வைத்தாய்; கொடுத்த பொருளை வாங்கிப் போகத் தக்காரையும் அனுப்பினாய். அவர்கள் என்னைப் புகழ்கிறார்கள். உன் ஆணைக்கு நான் கருவியாகத் தான் இருந்தேன் என்பது எனக்கு அல்லவா தெரியும்? இந்தப் புகழை நீ ஏற்றுக் கொள் அப்பா' என்று இறைவனிடம் தள்ளி, j8O