பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபிடி சோறு போலச் சுற்றிக் கொண்டிருந்தாள். ஆண் யானைபோல முருகன் வந்தான்; பெண் யானையைப் போல் இருந்தவள், ஆண் யானையைப் போல வந்தவனோடு சேர்ந்து வாழ வேண்டாமா? என்னைக் கல்யாணம் பண்ணிக் கொள்' என்று முருகன் கேட்டான். அவள் சண்டை போட்டாள்; சீறி விழுந்தாள். முருகன் அதைப் பொருட்படுத்தாமல் குழைந்து குழைந்து கெஞ்சினான். 'போடா, மூடா வேடா எனச் சினந்து அவள் சண்டை போட்டதை எல்லாம் அவன் விளையாட்டாக எண்ணி மகிழ்ந்தான். அவள் பொருகிறாளே என்று அவனும் அவளோடு பொரவில்லை. அதை ஒரு விளையாட்டாக நினைந்து, அவளைக் கெஞ்சிக் கெஞ்சிச் சுற்றிவந்தான்; அப்புறம் வசப்பட்டுவிட்டாள். ஆண்டவன் அவளை மணந்து கொண்டான். இது அந்தக் காட்டுக்கே சம்பிரதாயம்போல் இருக்கிறது. எப்படி? அது, பொரு பிடியும் களிறும் விளையாடும் புனம். பிடி என்றால் பெண் யானை, பிடி என்ன செய்கிறது. பொரு கிறது; சண்டை போடுகிறது; மோதுகிறது. பெண்யானை தன் னோடு மோதிச் சண்டை போடும்போது களிறு என்ன செய்கிறது? அது சண்டை போட்டால் இதுவும் சண்டை போடத்தானே வேண்டும்? ஆனால் ஆண் யானை அதை விளையாட்டாக நினைத்துத் திரும்பப் பொராமல் இருக்கிறது. s குழந்தையைக் தூக்கி வைத்துக் கொள்ளுகிறோம். அது உதைக்கிறது; உடனே நாமும் அதை உதைக்கிறோமா? அது நம் முகத்தில் தூது’ என்று துப்புகிறது. திருப்பி நாமும் அதன் முகத் தில் துப்புகிறோமா? இல்லையே! அது நமக்கு விளையாட்டாக இருக்கிறது. உதைக்கும் காலை முத்தமிடுகிறோம். அது துப்பிய எச்சிலைத் துடைத்துக் கொண்டே சிரித்து அதனை முத்தமிடுகிறோம். இப்படி அந்தக் காட்டில் ஒரு பக்கத்தில் மான் வயிற்றில் பிறந்த வள்ளியாகிய பிடி, முருகப் பெருமானாகிய களிற்றைப் பொருகிறது. சினத்தால் சொற்களை அள்ளி வீசிச் சண்டை போடுகிறது. அதை அவன் இன்பமாக எண்ணி, அவளைச் கோபித்துக் கொள்ளாமல், 'உன்னுடைய கோபச் சொற்களே இனிமையாக இருக்கின்றனவே! இன்னும் கொஞ்சம் வைய மாட்டாயா?" என்று விளையாடுகிறான். க.சொ.IV-13 183