பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை பத்த கணப்ரிய ந்ருத்த நடித்திடு பகூஷி நடத்திடு குகபூர்வ பச்சிம தகூகிண உத்தர திக்குள பக்தர்கள் அற்புதம் எனஒத சித்ர கவித்துவ சத்தமி குத்ததி ருப்புகழை என்பதில் எத்தனை வட சொற்கள் உருக்குலையாமல் அப்படியே வந்திருக்கின்றன! - சில ஆராய்ச்சிக்காரர்கள் அருணகிரிநாதர் வடமொழிக் கவிஞர்களின் வழியில் வந்தவரென்றும், தாமே சில நூல்களை வடமொழியில் இயற்றியிருக்கிறார் என்றும் எழுதியிருக்கிறார்கள். அந்த ஆராய்ச்சியின் முடிவைப் பற்றி நமக்குக் கவலையில்லை, திருப்புகழிலும் பிறவற்றிலும் உள்ள பாடல்களைப் பார்க்கும் பொழுது அவர் வடமொழியில் நிரம்பிய அறிவுடையவர் என்றே எண்ணத் தோன்றுகிறது. ★ முருகனைப் பற்றிய வீரப் புகழையும் பிற சிறப்புகளையும் ஒவ்வொரு பாடலிலும் விரிக்கிறார். கொடிய சூரன் நடுங்கும்படி வெற்பை இடிக்கும் மயில் மீது ஏறி நடாத்தும் இராவுத்தன் என்கிறார். பாம்புகளோடு சண்டையிட்டு அடக்குவது என்று மயிலைப் பின்னும் சிறப்பிக்கிறார். கிரெளஞ்சமலை ஆறு துண்டுகளாக விழ வேலைவிட்டவனென்று ஓரிடத்திலும், கொடுமுடிகளையுடைய மலையைக் கூறிட்ட வேலை உடையவனென்று வேறோரிடத்திலும் பாடுகிறார். முருகன் செஞ்சேவற் கொடியை உடையவன்; அரசன், குமரன், குகன்; அசுரர்களுக்குப் பகைஞன், கலக்கமற்றவன்; தீரன்; குணங்களால் உயர்ந்தவன், வள்ளிநாயகியை விரும்பியவன்; மயில்வாகனன்; திருமால் மருகன் என்று துதிக்கிறார். திருமாலின் பெருமையை இரண்டிடங்களில் சொல்லுகிறார். கிருஷ்ணாவதார வரலாறுகளில் காளிங்க நர்த்தனத்தையும், இராமாவதாரக் கதையில் அப்பெருமான் வருணன்மேல் அம்பு எய்ததையும் நினைப்பூட்டுகிறார். பெரும் பாம்பில் நின்று க.சொ. V-2 7