பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபிடி சோறு "அது மன்னும் கூடலில் காணப்படும்' என்று சொல்லுகிறார். முருகப் பெருமான் எல்லோருக்குமே எல்லாவற்றையும் சொல்லித் தருகிறவன். களவு கற்பு என்பவற்றைத் தன் வாழ்வி லேயே காட்டி நாடகம் ஆடினவன். வைதாரையும் வாழ வைக் கின்ற பெருமானுக்கு இந்த இரகசியம் சொல்லித்தரவா வேண்டும்? அவன் வள்ளிநாயகி பொருவதை விளையாட்டாக எண்ணி மகிழ்ந்தான். காட்டிலே உள்ள யானைகளுக்குங்கூட இது தெரியுமே! பிடி பொருகிறது; களிறு திரும்ப அதோடு மோதாமல் விளையாடுகிறது. பொருகிற பிடியோடு களிறு விளையாடும் புனம் அது. இந்தக் காட்டில் மான் வயிற்றிலே பிறந்த வள்ளி ஒரு பெண் யானையைப் போல உலாவிக் கொண்டிருந்தாள். ஆண் யானையைப் போல வந்த முருகன் கண்டையிலே தோற்று, அதனாலேயே வென்று அவளுடைய காதலன் ஆனான். முதலிலே சண்டைபோல ஆரம்பித்துப் பின்னர் விளையாட்டாக, இன்பமாக முடிகிறது அந்தக் கதை. போராட்டத்தில் இன்பம் காணுதல் மனிதர்களுடைய வாழ்க்கையே ஒரு போராட்டந்தானே? உத்தியோகம் தேடுவது ஒரு போராட்டம். சம்பாதிப்பது ஒரு போராட்டம். குடும்பம் நடத்துவது ஒரு போராட்டம். அன்றாடம் சாப்பிடுவதே ஒரு போராட்டம். இந்தப் போராட்டங்களை எல்லாம் எவனொருவன் விளையாட்டாகக் கருதுகிறானோ அவனுக்கு அவைகளே இன்பமாக இருக்கும். இதை அந்தப் புனத்தில் இருக்கும் களிறு சொல்லித் தருகிறது. சண்முகன் வள்ளி நாயகனைக் கண்டுகொள்ள ஏதாவது அடையாளம் உண்டா? அவன் ஆறுமுகப் பெருமான்; சண்முகன். நமக்கு ஆறுதல் அளிக்கும் அவனுடைய ஆறுமுகங்களைக் கொண்டே அவனை அடையாளம் கண்டு கொள்ளலாம். சண்முகவா! என்று சொல்லுங்கள் என்கிறார். 185