பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபிடி சோறு இறார். இறைவன் திருவருளும் அதனால் பேரின்பமும் கிடைப் பதற்குரிய எளிய வழியைச் சொல்லித் தருகிறார் அருணகிரியார். பொருபிடி யும்களி றும்விளை யாடும் புணச்சிறுமான் தருபிடி காவல! சண்முக வா! எனச் சாற்றிநித்தம் இருபிடி சோறு கொண் டிட்டுண் டிரும்;வினை யோம் இறந்தால் ஒருபிடி சாம்பரும் காணாது மாய உடம்பிதுவே. (மோதுகின்ற பெண் யானையும் ஆண் யானையும் விளையாடுகின்ற காட்டையுடைய தினைப்புனத்தில் இருந்த சிறிய மான் ஈன்ற பெண் யானையைப் போன்ற வள்ளி நாயகியின் தலைவனே! ஆறுமுகனே!" என்று சொல்லி நாள்தோறும் இரண்டு பிடிசோறு ஈட்டி, ஒரு பிடி பசித்த வர்களுக்கு அளித்து, எஞ்சிய ஒரு பிடியை நீங்கள் உண்டு அமைதியாக இருங்கள். இரு வினைகளையும் உடைய நாம் இறந்துபோனால் மாயமாக மறைந்து போகும் உடம்பாகிய இது ஒரு பிடி சாம்பரேனும் காணாது. ஆதலின் இதனைப் போற்றுவதோடு நில்லாமல் இது உள்ளபோதே அறம் செய்யத் தலைப்படுங்கள். பொரு - மோதும். புனம் - தினைக் கொல்லை. காவலன் - தலைவன். இட்டு - பிறருக்குக் கொடுத்து. இரும் - கவலையற்று இருங்கள். இருவினையோம்' என்பது ஒரு பாடம். வினையோம் - இருவினைகளையுடைய நாம், தமக்கும் அதுவே கதி என்பாரைப் போல இப்படிச் சொல்கிறார். வினையோம்; உளப்பாட்டுத் தன்மைப் பன்மை. காணாது - எஞ்சாது. மாயம் - நிலையாமை.) இது கந்தர் அலங்காரத்தில் ஐம்பத்தேழாவது திருப்பாடல். 187