பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 யவர்கள் கண்டுகொள்ளட்டும் என்று வைப்பார்கள். அப்படியே முன்னால் முருகப் பெருமானைக் காமுகனாகத் தோற்ற வைத்து, "அப்படி எண்ணிவிடுவது தவறு; இதன் உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள். பார்ப்போம்" என்று சொல்வாரைப் போலப் பின்னாலே அக்கருத்துக்கு முரண்பாடுள்ளது போன்ற ஒருகதையை அருணகிரியார் சொல்கிறார். தட்சிணாமூர்த்தி சிவபெருமான் ஞானசொரூபியாக, தட்சிணாமூர்த்தியாகக் கல்லால மரத்தடியில் தெற்குமுகமாக வீற்றிருந்தான். கல்லால மரம் என்றால் கல்லினாலே பண்ணின ஆல மரம் அல்ல. இது கல்லுக்கு நடுவில், மலைப் பாறைகளுக்கு இடையில் முளைத்த சிறிய ஆலமரம்; ஆதலாலே கல்லால மரம் என்று பெயர்; கல் இச்சி என்று இதைச் சொல்வார்கள். அந்த மரத்தின் அடியில் தட்சிணாமூர்த்தி யோக சமாதியில் அமர்ந்திருந்தான். சனகர், சனந்தனர், சனத் சுஜாதர், சனத்குமாரர் ஆகிய நான்கு பேர்களுக்கும் ஒரு சந்தேகம் வந்துவிட்டது. அவர்களோ நான்மறை யும் ஆறங்கமும் கற்றுக் கேள்வியிலும் வல்லார்கள். அவர்களுக்கு வேதத்திலே சந்தேகம் வர நியாயம் இல்லை; வேதத்தை நன்கு படித்தவர்கள்; அதைக் கொண்டே போக்கிக் கொள்ள முடியும். சாஸ்திரத்திலும் சந்தேகம் இல்லை; அவர்கள் வேதசாஸ்திர அறிவின் தலைநிலத்திலே இருப்பவர்கள். அவர்களுடைய சந்தேகத்தைப் பேசித் தீர்க்கலாம் என்றால் அவர்கள் பேச்சிலும் வல்லவர்கள். அவர்கள் கேட்டறியாத பொருளும் இல்லை. அவர்களுக்கே ஐயம் உண்டாயிற்று என்றால் அந்த ஐயத்தை எவ்வாறு நீக்குவது? வேதத்திற்கு அப்பாற்பட்டதாய், சாஸ்திரத் திற்கு அப்பாற்பட்டதாய், கல்விக்கும் கேள்விக்கும் அப்பாற் பட்டதாய் எழுந்த அவர்களுடைய சந்தேகத்தை, பேசாத பேச்சி னாலே, தன்னுடைய திருக்கரத்தினால் சின்முத்திரையைக் காட்டிச் சொல்லாமல் சொல்லி அவர்களுடைய சந்தேகத்தை நீக்கிவிட்டான் தட்சிணாமூர்த்தி. சின்முத்திரை சித் என்பது ஞானம் சின்முத்திரை என்பது ஞானத்தின் அடையாளம். முன்பு ஒரு முறை இதைப் பற்றிச் சொல்லியிருக் 19Q