பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனிய பிரான் கிறேன். ஆன்மா எப்போதும் மூன்று மலங்களோடு சேர்ந்திருக் கிறது. ஒரு கையில் ஐந்து விரல்கள் இருந்தாலும் நான்கு விரல்கள் ஒரு வரிசையிலும், ஐந்தாவதாகிய கட்டை விரல் அவற்றோடு சேராமல் தனித்தும் இருக்கின்றன. கட்டைவிரல் தனித்து இருந்தாலும் அது மற்ற நான்கு விரல்களோடு சேராத காலத்து எந்த வேலையும் செய்ய முடியாது. பல காரியங்களைச் செய்யும்போது மற்ற விரல்களோடு கட்டைவிரலும் சேர்ந்து உதவி புரிகிறது; வேலை செய்யாதபோது அவற்றோடு சேராமல் தனித்தே நிற்கிறது. ஆன்மாக்கள் செய்கிற காரியங்களில் எல்லாம் இறைவன் உறுதுணையாக இருந்தாலும் அவன் இந்த உலகத்துக்கு அப்பாற் பட்டவனாக, மலங்களுடைய சம்பந்தம் இல்லாத வனாகவே இருக்கிறான். கட்டைவிரலுக்கு அடுத்தபடி சுட்டுவிரல் இருக்கிறது. அதை ஆள்காட்டி விரல் என்றும் சொல்வார்கள். "அதோ போகிறான் பார் எனத் தெருவில் போகிற ஆளைக் காட்டுவதனால் அதற்கு ஆள்காட்டி விரல் என்று பெயர் வந்ததாகக் கூறுவர். அதையும் விடச் சிறப்பான பொருள் வேறு ஒன்று சொல்லலாம். ஆள் என்றால் அடிமை, ஏவலன் என்று பொருள். 'ஆளான அடியவர் கட்கு அன்பன் தன்னை' என்று அப்பர் சுவாமிகள் பாடுகிறார். எல்லா ஆத்மாக்களும் இறைவனை நாடிச் செல்லவேண்டிய ஆட்கள். ஆள் என்பது ஆன்மா. ஆளாகிய ஆன்மாவைக் குறிக்கிற விரல் ஆதலில் ஆள்காட்டி விரல் என்று பேர் வந்தது. ஆள்காட்டி விரல் ஆன்மாவைச் சுட்ட, கட்டைவிரல் ஆண்டவனைச் சுட்டுகிறது. ஆன்மா எப்போதும் மலங்களோடு சேர்ந்து நிற்கிறது. சுட்டு விரல் கட்டைவிரலோடு சம்பந்தப்படாமல் மற்ற மூன்று விரல் களோடு சம்பந்தப்பட்டே இருக்கிறது. மலத்தோடு சம்பந்தப்பட்டு ஆன்மா தொழில்படும்போதும் அந்தத் தொழில்களுக்கு இறைவன் உதவியாக இருப்பது போலவே, கட்டை விரலானது மற்ற மூன்று விரல்களோடு சேர்ந்து ஆள்காட்டி விரல் தொழில்படும்போது கூட நின்று உதவுகிறது. இறைவன் மலத்திற்கு அப்பாற்பட்ட வனாக இருப்பதுபோல் கட்டைவிரல் தனியே இருக்கிறது. 191