பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 இறைவன் பதி. ஆத்மா பசு. மலங்கள் பாசம். ஆத்மா பாசத்தோடு சம்பந்தம் உடையதாக இருக்க வேண்டும்; அல்லது பதியோடு தொடர்புடையதாக இருக்க வேண்டும். பாசத்தோடு சம்பந்தமுடையதாக இருக்கும் போது பலவிதச் செயல்களைப் புரிந்து இன்ப துன்ப நுகர்ச்சிகளை அடைகிறது. பதியோடு சேர்ந்து விட்டால் பாசம் கழன்று விடும். பதிக்கு மல சம்பந்தம் இல்லை. பதியோடு ஒன்றாக இணைந்துவிட்ட பசுவுக்கும் மல சம்பந்தம் இல்லாமற் போகிறது. தட்சிணாமூர்த்தி என்ன செய்தான்? ஆள்காட்டி விரலையும், கட்டைவிரலையும் சேர்த்து, பிற மூன்று விரல்களும் தனித்து நிற்கும்படி சின்முத்திரையைக் காட்டினான். பாசத்திலிருந்து ஆத்மா விடுதலை பெறவேண்டுமானால் பதியோடு சேர்ந்திருக்க வேண்டும் என்கிற பொருளை அந்த ஞான முத்திரையினால் அவன் உணர்த்தினான். இறைவனுடைய தொடர்பு இல்லாமல் யாருக்கும் இருக்க முடியாது. எப்பொழு தும் இறைவனுடைய தொடர்பு இருக்கிறது. சுட்டு விரல் மற்ற மூன்று விரலோடு சேர்ந்து தொழில்படும்போது கட்டைவிரல் தானே போய்ச் சேர்ந்து கொண்டு அதற்கு உறு துணையாக இருக்கிறது. அப்படிச் சேர்வது போதாது; மூன்றையும் விட்டுப் பெருவிரலோடு இணைய வேண்டும். நாம் மூச்சு விடுகிறோம். உண்ணுகிறோம். உறங்குகிறோம். பலவிதமான தொழில் செய்கிறோம். அப்போது எல்லாம் இறை வனுடைய தொடர்பு இருக்கிறது என்றாலும், ஆத்மா மலங் களோடு சேர்ந்து தொழில்படுகிறது. அதனால் இறப்பு, பிறப்பு என்னும் பிணிக்கு உள்ளாகிறது. அது என்றைக்கு இறைவனோடு ஒன்றிவிடுகிறதோ அப்போது முத்தியின்பம் பெறுகிறது. அந்த முத்தியை அடைவதற்குரிய உபதேசத்தைச் சின்முத்திரையினாலே குறிப்பித்தான் தென்முகக் கடவுள். தென்முகம் ஏன்? அவன் ஏன் தெற்கு முகம் நோக்கி இருந்து காட்ட வேண்டும்? நாம் எந்தக் காரிய்த்தையும் தெற்கு முகம் நோக்கிச் செய்ததில்லை.ஆனால் பரமேசுவரனாகிய குருநாதன் அடியார் 192