பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனிய பிரான் களுக்கு அருள் செய்வதற்காக, அடியார்களுடைய பகைவனை அழிப்பதற்கு ஆயத்தமாகத் தெற்கு முகம் நோக்கி உட்கார்ந்திருக் கிறான். நடராஜனாகக் காலைத் தூக்கிக் கொண்டு நிற்கும்போதும் தென்முகம் நோக்கி நிற்கிறான். பகைவன் முன்னால் இருக்கும் போது அவனுக்கு முதுகு காட்டுவது வீரனுக்கு அழகல்ல. அவனை நேர் நின்று எதிர்க்க வேண்டும். சங்கநூல்களில் 'கடந் தடும்" என்று ஒரு தொடர் வரும். அதற்கு உரையாசிரியர்கள் 'வஞ்சியாது எதிர் நின்று கொல்லும் என்று உரை எழுதுவார்கள். அதுதான் சுத்த வீரம். நமக்கு மிகவும் துன்பத்தைத் தருகின்ற மரணத்தை விளைக்கும் காலனைத் தென்னவன் என்றும் தென்புலக்கோன் என்றும் கூறுவா. "சட்டத் தென்னவன் தன்கடா வேந்தனை வெட்டி" என்பது தக்கயாகப் பரணி. 'தென்புலக்கோன் பொறியொற்றி" என்பது பெரியாழ்வார் திருமொழி. யமன் தென்திசைக்குத் தலைவன். - - நம்முடைய பகைவன் யார்? இறப்பும் பிறப்புந்தான் நமக்குப் பகை. இறப்புத்தான் பெரும் பகை; கொடும் பகை. மரணம் இல்லாத வாழ்வு நமக்கு வந்துவிட்டால் பிறகு துன்பம் இல்லை. அந்த இறப்பு என்பதைப் பருப்பொருளாக உருவாகக்காட்டி யமன் என்றார்கள். யமன் நமக்கு மரணத்தை விளைவிக்கிறான் என்றார்கள். மரணம் என்ற நினைவை உண்டாக்குகின்றவனாக அவனை வைத்தார்கள். அவனை ஏன் கிழக்கே இருப்பவனாக வைக்கக் கூடாது? மேற்கேகூட வைத்திருக்கலாமே? தெற்கே ஏன் வைத்தார்கள்? தெற்கும் வடக்கும் நம்முடைய பாரத நாட்டில் கிழக்கிலும் மேற்கிலும் கடல்கள் இருக்கின்றன. வடக்கே போகப் போக நிலப்பரப்பு விரிந்து கொண்டே போகிறது. ஆனால் தெற்கே வரவரக் குறுகிக் 193