பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 கொண்டே வருகிறது. கடைசியில் ஆழமான கடலாகிவிடுகிறது. வடக்கே போகப் போக மனிதன் உயர்ந்துகொண்டே போகிறான். மலையின் உச்சிக்கே போய் விடுகிறான். தெற்கே போகப் போகக் கடலில்தான் போய் வீழ்ந்து மூழ்க வேண்டும். இதைப் பூகோளமே சொல்கிறது. வாழ்வு வளம் பெற்று உயர்வு பெற்று உய்வு பெற அருள் வழங்கும் பரமேசுவரனை வடக்கே உள்ள இமாசலத்தின் உச்சியிலே வைத்தார்கள். மரணம் என்பது தெற்கே இருந்து வருவதாகச் சம்பிரதாயமாக வைத்தார்கள். மரணத்தைத் தருகிறவனும் அதை நீக்குகிறவனும் எதிரிகள். ஒருவன் தெற்கே இருக்கிறான்; மற்றவன் வடக்கே இருக்கிறான். ஒருவன் பள்ளத் தில் இருக்கிறான்; மற்றவன் மேட்டில் இருக்கிறான். மனிதர்களுக்குப் பகைவனாக இருக்கிறவன் தென்னவன், அல்லது காலன். நம்முடைய பகைவனைத் தன்னுடைய பகை வனாக நினைந்து அவனை அடக்குவதற்கு ஆயத்தமாக இருப் பவனைப் போலத் தெற்கு நோக்கித் தட்சிணாமூர்த்தி அமர்ந்திருக் கிறான். கையில் அம்பு முதலிய கருவிகளை வைத்துக் கொண்டு செய்யும் போர் அல்ல இது. அஞ்ஞானத்தை ஞானத்தினாலே ஒழிக்கும்போர். மரணத்திற்குக் காரணமாக உள்ள காலனை, அஞ்ஞான உருவத்தை ஒழிப்பதற்காக ஞானாசிரிய னாகிய தட்சிணாமூர்த்தி சின்முத்திரையோடு, ஞான அடையாளத்தோடு தெற்கு நோக்கி வீற்றிருக்கிறான். தேவர்களின் கவலை எல்லா உயிருக்கும் உயிராய் இருக்கிற இறைவன் தென் முகம் நோக்கிச் சின்முத்திரையோடு யோகத்தில் அமர்ந்துவிட்டான் என்றால் உலகம் எல்லாம் செயல்படுமோ? அவன் யோகத்தில் அமர்ந்தான். உலகமே யோகத்தில் அமர்ந்துவிட்டது. யாரும் சிந்திக்கவில்லை. தொழில் செய்யவில்லை. ஆடவர்கள் பெண் களை நாடிப் போகாமல் அப்படியே தவத்தில் அமர்ந்துவிட்டார்கள். பெண்களும் அப்படியே. இப்படி இருந்தால் உலகம் என்ன ஆவது? நல்லவர்கள் ஒன்றும் செய்யவில்லை என்றால் தேவர் களுக்கு வாழ்வு எங்கே சூரபன்மன் முதலிய அரக்கர்கள் தேவர் களை வருத்தத் தொடங்கிவிட்டார்கள். தேவர்களுடைய அரசை அடித்துப் பிடுங்கிக் கொண்டு அவர்களை விரட்டிவிட்டார்கள். 32