பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 நடிக்கும் பிரான் என்று கண்ணனையும், இலங்காபுரிக்குப் போகைக்கு நீ வழி காட்டென்று போய்க் கடல் தீக்கொளுந்த வாகைச் சிலை வளைத்தோன் என்று இராமனையும சொல்வது காண்க. ★ கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகளைப் புத்தக உருவாக்கு வதனால் என்ன பயன் என்று தொடக்கத்தில் நான் நினைத்த துண்டு. ஆனால் இவற்றைப் படித்த பல அன்பர்கள் தாம் பல கருத்துக்களைத் தெளிவு பெற அறிந்து கொண்டதாக எழுதினார்கள்; நேரிலும் சொன்னார்கள். இலக்கியத் துறையில் இப்பாடல்களின் நயங்களை அன்பர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது என் தலைமையான நோக்கம் அன்று. பெருங்கருணையாளராகிய அருணகிரிப் பெருமான் வாக்கினால் வாழ்க்கைக்குப் பயன் உண்டாக வேண்டும்; அநுபவத்தில் ஏதாவது வளர்ச்சி அமைய வேண்டும்; அவன் அருளைப் பெறு வதற்கு இப்போதே ஏதேனும் முயற்சி செய்யத் தொடங்குவோம் என்ற ஆசை எழ வேண்டும்; முருகன் திருவருள் என்பது வெறும் கற்பனையன்று; உண்மையில் ஆன்ம லாபம் அடைவிக்க செய்யும் செல்வம் அது என்ற நம்பிக்கை நெஞ்சறிய ஏற்பட வேண்டும். இந்த நோக்கத்தோடுதான் இந்தச் சொற்பொழிவுகளை ஆற்றுகிறேன்; இவற்றைப் புத்தக உருவில் வெளியிடுகிறேன். என்னைக் காட்டிலும் பேரறிவும் இறைவன் திருவருள் நலமும் பெற்றவர்கள் இதைச் செய்தால் இன்னும் எத்தனையோ மடங்கு சிறப்புடையதாகவும் பயனுடையதாகவும் இத்தொண்டு இருக்கும் என்பதில் ஐயமே இல்லை. ஆயினும் அருணகிரி நாதருடைய அருள்வாக்கின் எல்லையற்ற சிறப்பினால் இந்த எளியேனுடைய முயற்சிக்கும் ஒரு சிறிய மதிப்பு, ஒளி கிடைக் கிறது போலத் தோன்றுகிறது. அலங்காரப் பாடல்களைப் படிக்கும் போதும், அவற்றைப் பற்றிச் சிந்திக்கும்போதும், சொற்பொழிவு ஆற்றும்போதும், புத்தக வடிவில் அமைக்கும் போதும் எனக் குள்ளே ஒரு தனி இன்பத்தைக் காண்கிறேன். இவற்றோடு பழகு வதனாலேயே இந்தச் சிறிதளவு இன்பம் உண்டாகிறதே. இவர் கூறும் வழியே சென்றால் எத்தனை இன்பம் உண்டாகும்! 3