பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனிய பிரான் காதலன் எங்கோ இருக்கிற தன் காதலியை நினைக்க ஆரம்பிப் பான். மன்மதனுடைய அடுத்த பாணம் மாம்பூ. அது வசந்த காலத்தில் பூக்கிறது. மாம்பூப் பட்டவுடனேயே உடம்பெல்லாம் வெப்பம் உண்டாகிக் பிரிவினால் பசலை தோன்றும். உடம்புக்குப் பிரிவினாலே உண்டாகின்ற நிறத்தைப் பசலை என்பார்கள். தாமரை எய்தவுடன் நினைப்புண்டாகி, மாம்பூ எய்தவுடன் பச்லை பூக்கும். அவனுக்கு உற்சாகம் எல்லாம் போய்விடும். காதலியைக் தாணோமே என்று ஏங்கி ஏங்கிச் சோர்ந்து உட்கார்ந்துவிடுவான். எந்த வேலையிலும் ஊக்கம் இருக்காது. அடுத்து மூன்றாவது பாணமாகிய அசோகம் பூவை எய்தவுடன் செயலற்றுப் போய் விடுவான். அசோக மலர் வேனிற் காலத்தில் செக்கச்சேவல் என்ற நிறத்துடன் மலரும். அந்த அம்பைக் காமன் விட்டவுடன் காதலன் தன்னுடைய சூழ்நிலையையும், வேலையையும் மறந்து காதலியின் நினைவாகவே சமைந்து போய் உட்கார்ந்துவிடுவான். அன்ன ஆகார நினைப்புக்கூட இல்லாமல் அமர்ந்து விடுவான். அடுத்தாற்போல மன் மதன் தன்னுடைய நான்காவது அம்பாகிய முல்லையை விடுத் தானோ இல்லையோ, கொஞ்சநஞ்சம் இருந்த உணர்ச்சியும் போய்ப் பிணம் போலக் கிடப்பான்; காதலி வந்தால் பிழைத் தான்; இல்லையானால் மன்மதனுடைய ஐந்தாவது பாணமாகிய நீலோற் பலத்தை எய்தவுடனே இறந்து படுவான். ஐந்து மலரம்புகளாலும் இன்ன இன்ன விளைவு உண்டாகும் என்பதை ஒரு பாட்டுச் சொல்கிறது. "நினைக்கும் அரவிந்தம்; நீள்பசலை மாம்பூ அனைத்துணர்வும் நீக்கும் அசோகு - நுனித்துணரின் முல்லைகிடை காட்டும்; முழுநீலம் மாதராய்; கொல்லும்,மதன் அம்பின் குணம்." இங்கே பரமேசுவரனுடைய கருணையையும், மன்மதனுடைய குறும்பையும் எடுத்து விளக்குவார் போன்று அருணகிரியார். காம னுடைய நான்காவது அம்பாகிய முல்லையைச் சொல்லுகிறார். இக்கு முல்லையுடன் பற்று ஆக்கையும் வெந்து எப்போதுமே அருணகிரியார் புராணக் கதைகளை அழகுபடுத்திச் சொல்வது வழக்கம். க.சொ. W-14 1993