பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனிய பிரான் மலரால் அர்ச்சித்துக் கொண்டிருந்தானானால் ஆண்டவன் அவனுக்கு அருள் செய்திருப்பான். இப்போதும் மலர்களை எடுத்து வந்தான்; அர்ச்சிப்பதற்காக அல்ல அம்பாகத் தொடுத்துத் தவத்திலே வீற்றி ருக்கிற பெருமானின் தவத்தைக் குலைக்க வந்தான். சங்க்ராம வேளாக, சண்டை போடும் காமனாக வந்தான். ஞானமூர்த்தியின் திருக்கண் பட்ட மாத்திரத்திலே பட்டான் அழிந்தான். அந்த ஞானமூர்த்தியின் கண்களிலேதான் மற்றொரு வேளும் வந்தான். கருவேள் வெந்தான்; செவ்வேள் வந்தான். 'செவ்வேளைத் தோற்றுவித்த கண் கருவேளைச் சுட்டெரிக்கலாமா?” என்றால் அவரவர்களுடைய பலத்திற்கும் பலவீனத்திற்கும் ஏற்றபடி விளைவு நேர்ந்தது. இக்கு முல்லையுடன் பற்றாக்கையும் வெந்து சங்க்ராம வேளும் பட விழியால் செற்றார்க்கு இனியவன் மன்மதனைக் கண்களினாலே அழித்தவனுக்கு இனிய பிரானாகச் செவ்வேள் தோன்றினான். அஞ்ஞானம் அழிந்து ஞானம் தோன்றினால், காமம் அழிந்து காமனுடைய சமாதியிலே ஞானம் உருவெடுத்து நின்றால், அது ஞானப் பெருமானின் கண்ணுக்கு இன்பம் அளிக்காதா? ஞானமூர்த்திக்கு இனிய வன்ாகிய இவன் யார் தெரியுமா?"இவன்தான் நான் முன்னாலே சொன்னேனே, தினைக் கொல்லையிலே கிளி ஓட்டிக் கொண் டிருந்த வள்ளியை நாடிச் சென்றவன்; வள்ளியின் பக்குவம் தெரிந்து நாடி ஓடியவன்' என்கிறார் அருணகிரியார். வள்ளி நாயகியின் நிலை முருகனை அடைவதற்கு முழு உரிமையை உடைய வள்ளி, தான் யார் என்பதை உணர்ந்து கொள்ளாதவளாய்க் குறச் சிறுமி யாய்த் தினைப்புனம் காத்துக் கொண்டிருந்தாள். அவள் காவல் புரிந்து கொண்டிருந்த புனம் எப்படி இருந்தது, விளைந்த தினைக் கதிர்கள் எவ்வாறு இருந்தன? நெற்றாப் பசுங்கதிர்ச் செவ்வேனல் முருகன் இளையவன். வள்ளியெம்பெருமாட்டி இளையவள். அப்பெருமாட்டி காவல் புரிந்து கொண்டிருந்த புனத்தில் இருந்த 2Oj.