பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனிய பிரான் என்று முருகனைக் குருவாகக் கொண்டு கலைநலம் பெற்ற அருட்கவிஞர். அவர் சொல்லிலும் பொருளிலும் யாப்பிலும் பல புதுமைகளைப் புகுத்தியிருக்கிறார். எம்பெருமானின் திருக்கரத்திலுள்ள வேலை ஞானவேல் என்று பெரியவர்கள் சொன்னார்கள். அருணகிரியார் ஞானத்தைத் தரும் கருவிகளாகிய வேதமும் ஆகமமும் வேலாயுதமாக இருக் கின்றன என்று புலப்படுத்தி, "வேதாகம சித்ரவேல்" என்று ஒரு புதுக் கருத்தைச் சொன்னார். இப்படி யாரும் சொல்லவில்லையே!” என்று கேட்க முடியுமா? அவருக்குப் புதிய கருத்தையும் புதிய சொல்லையும் படைக்கும் உரிமை இருக்கிறது. இங்கே நெற்று என்ற பெயர்ச்சொல்லின் அடியாக வினையை உண்டாக்கி நெற்றா என்ற எதிர்மறைப் பெயரெச்சத்தை அமைக் கிறார். நெற்றாத என்பது நெற்றா என்று விகாரமாய் நின்றது. நெற்றாப் பசுங்கதிர்ச் செவ்வேனல் காக்கின்ற. இன்னும் நெற்று ஆகாத, முற்றாத, பசுமை நிறத்தை உடைய கதிர் களையுடைய சிவந்த தினைப்புனத்தை வள்ளி காவல் காத்துக் கொண்டிருந்தாள். தினையின் மேல் நிறம் சிவப்பாதலால் செவ் வேனல் என்றார். இளம்ை மாறாத கதிர்களை உடைய செந்நிறம் பெற்ற தினைக்கொல்லையைக் காவல் புரிகின்ற வள்ளியின் காதலன் முருகன். நீலவள்ளி. நீலம் என்பது கருமையும் பசுமையும் கலந்த ஒரு தோற்றம். உமாதேவியின் திருமேனி அத்தகையது. பச்சைப் பசுங்கொடி போல நீல நிறத்தையுடைய வள்ளி பச்சைப் பசுங்கதிர் உள்ள தினைப்புனத்தைக் காத்துக் கொண்டிருந்தாள். வள்ளியின் பக்குவம் நெற்றாப் பசுங் கதிர்ச் செவ்வேனல் காக்கின்ற நீலவள்ளி முற்றாத் தனத்திற்கு இனிய பிரான். முற்றாத செவ்வி அவளுடைய கனிந்த பக்குவத்தைக் காட்டு கிறது. தனம் பருவத்தைக் காட்டுகின்ற அடையாளம்; நாயகனைப் பெறுவதற்குரிய பருவத்தை அடைந்து விட்டாள் என்பதற்குரிய அடையாளம். மற்ற பெண்களுக்கு ஏற்படும் பருவம் போன்றது 203