பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 அன்று இது. பரமேசுவரனுடைய ஞானக் கண்களிலிருந்து தோன்றிய ஞான பாஸ்கரனை அடைவதற்குரிய பக்குவம் ஆன்மா வாகிய வள்ளிக்கு உண்டாயிற்று. ஆன்மா முதிர்ச்சியை அடைந்தது. அவளிடத்திலே தோன்றிய பருவத்தின் அடையாளத்தைக் கண்டு முருகன் தானே வலிய வந்து அவளை ஆட்கொண்டான். அன்று வந்தவன் யார்? காமம் தன்னுடைய எல்லையிலே கூட வராதவாறு காம சங்காரத்திற்குப் பிறகு தோன்றிய குமார நாதன். ஞானமயமாகத் தோன்றிய பெருமான் உள்ள இடத்தில் அஞ்ஞானமயமான காமம் இருக்க முடியுமா? அவன் அருளைப் புணையாகக் கொண்டு அல்லவா கலங்காத சித்த உறுதியுடன் வெங்காம சமுத்திரத்தைக் கடந்தார் அருணகிரிநாதப் பெருமான்? அந்த ஞானக்கதிரவனையே நினைந்து வாழ்பவர்களுக்குக் காமமயமான அஞ்ஞானம் அருகில்கூட வராது. அவனை நினைப் பவர்களுக்கு ஞானம் தோன்றுகிறது. ஞானம் தோன்றியவுடன் மனப்பக்குவம் முதிர்கிறது. பக்குவம் முதிர்ந்த ஆன்மா இறை வனோடு ஒன்றுபடுகிறது. வள்ளியெம்பெருமாட்டி ஒரளவு முருகனை நினைந்து காட்டில் வாழ்ந்தாள். அவளை அறியாமலே அவளுடைய பக்குவம் முதிர்ந்து கொண்டிருந்தது. வேடிச்சியாக வாழ்ந்த அவளுடைய வாழ்வில் வேடன் ஒருவன் வந்தால் தன்னைப் பற்றிய நினைப்பை மறந்து அஞ்ஞானமயமான காம வாழ்வில் இறங்கி விடுவாளோ என்று சோதிக்க வேடனாக வந்தான் முருகன். ஒருவரைத் தான் அடைய வேண்டும் என்று எப்போதும் நினைத்துக் கொண்டிருப்பாள் காதலி. இந்த எண்ணம் உறுதிப் பாடுடையதானால் அவள் வேறு யார் வந்தாலும் திரும்பிக்கூடப் பாராமல் வெறுத்து ஒதுக்குவாள். யார் மாட்டுக் காதல் உண்டானதோ அவனை அடைய முயலுதல், அதற்குத் தடையாக இருப்பவர்களை வெறுத்தல் என்று இரண்டு வகையான இயல்பு கள் அவள்பால் தோன்றும். முருகன் செய்த சோதனை முருகனை அடையவேண்டும் என்கிற நினைவோடு இருந்தவள் வள்ளி. அதற்குரிய பக்குவத்தை அடைந்த அவளிடம் முருகனாக வராமல் வேடனாக அவன் வந்தான். அவனைக் கண்டு வெறுத்து 204