பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 பின்னே சொல்வதைக் கொண்டு முருகன் வள்ளியினிடம் கொண்ட காதல் வெறும் காமக்கிளர்ச்சி அன்று என்று தெரிந்து கொள்ள வேண்டும். ஞானயோகியாக அமர்ந்திருந்த சிவ பெருமான் தன் ஞானவிழியால் கருவேளைச் சுட்டெரித்துவிட்டுச் செவ்வேளைத் தோற்றுவித்தான். அந்த ஞானக் கண்களுக்கு இனியவன் ஞான உருவனாகத்தானே இருக்க வேண்டும்? அவன் செய்த திருவிளையாடல் ஞானாசிரியன் செய்யும் செயலாகத் கொள்வதற்குரியது. பக்குவம் அடைந்த ஆன்மாக்களை ஆட்கொள் வதற்காக ஓடிவரும் இனிய பிரான் அவன். முற்றாத் தனத்துக்கு இனியபிரான் என்று சொன்னால் உண்மை விளங்காது என்று, வேள்பட விழியால் செற்றார்க் கினியவன் என்றும் கூறினார். அந்த இரண்டையும் இணைத்துச் சொன்னதற்குக் காரணம் நாம் ஏமாந்து போகாமல் உண்மையை உணர வேண்டும் என்பதுதான். முருகன் ஞானாசிரியன் ஆதலாலே வள்ளிநாயகியின் பக்குவம் உணர்ந்து அவளிடம் தானே சென்று வலிய ஆட் கொண்டான். இது வேறு, அது வேறு என்று நினைக்கக் கூடாது. தனித் தனியாகப் பார்த்தால் வேறாகத் தோன்றும். அவனுடைய வரலாற்றோடு, கருணைத் திருவிளையாடல்களோடு சேர்த்துப் பார்க்க வேண்டும். மாரனுடைய அழிவிலே தோன்றிய குமாரன் காமவயப்படுவானா? நமக்கு மயக்கம் உண்டாகிறதா இல்லையா என்று சோதித்துப் பார்ப்பவரைப் போல வள்ளி கல்யாணத்தை முதலில் சொன்னார், அருணகிரியார். நாம் முடிவு கட்டுவதற்குள் அவனுடைய அவதார ரகசியத்தைப் பின்னே சொன்னார். அதனால் வள்ளி கல்யாணம் ஞானத் திருமணம் என்று புலனா யிற்று. முருகன் பூவுலகத்து வள்ளியை ஆட்கொண்டான் என்பதைக் கொண்டு அவன் நம்மைப் போன்றவன், மலத்தோடும் சம்பந்தப் பட்டவன் என்று நினைத்துக் கொள்ளக் கூடாது. அவன் எத்தகையவன் தெரியுமா? அமரர் தலைவன் தேவேந்த்ர லோக சிகாமணியே. தேவர்களுக்கு எல்லாம் தலைவனாகிய இந்திர லோகத் திற்குச் சென்று பார்க்கலாம். முருகன் வந்துவிட்டான் என்றால் தேவர்கள் அவனைத் தூக்கித் தங்கள் தலையில் வைத்துக் 2C6