பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனிய பிரான் கொண்டு கூத்தாடுவார்கள். தேவலோகத்தில் வாழ்கிற அமரர் களுடைய தலைமேலே முடி இருக்கிறது; அந்த முடிக்குமேல் மணியாக அவன் விளங்குவான். - - அவர்களுடைய முடிக்கு அவன் மணியாக இல்லாவிட்டால் அவர்கள் தலையில் மகுடமே இராமற் போயிருக்கும். அவனை அவர்கள் வணங்காமல் இருந்திருந்தால் சூரன் அவர்கள் வாழ்வையே குலைத்திருப்பான். - தேவர்களின் முடிக்கு மணியாக விளங்குபவன்; நெற்றிக் கண்ணால் காமனையே சங்காரம் பண்ணின பெருமானுக்கு இனிய வன்; வள்ளிக்கும் இனியவன் என்று அடியிலிருந்து பார்த்தால், 'முருகன் தேவர்களுக்கும் உபகாரம் செய்த தலைமையுடைய வன். காமத்தின் லேசமும் சார இயலாத ஞானவெளியில் உலவும் ஞானப்பிரான். அவன் தன்னுடைய கருணையினால் பக்குவ முள்ள ஆன்மாக்களை வலிந்து வந்து தடுத்து ஆட் கொள்வான் என்ற கருத்துப் புலனாகும். - நெற்றாப் பசுங்கதிர்ச் செவ்வேனல் காக்கின்ற நீலவள்ளி முற்றாத் தனத்திற்கு இனியபி ரான்,இக்கு முல்லையுடன் பற்றாக் கையும்வெந்து, சங்க்ராம வேளும் படவிழியால் செற்றார்க்கு இனியவன், தேவேந்த்ர லோக சிகாமணியே. - - (முதிர்ந்த நெற்று ஆகாமல் இருக்கும் பசிய கதிரையுடைய சிவந்த தினையைக் காக்கின்ற நீலநிறம் படைத்த வள்ளிநாயகியின் இளம்பருவ அடையாளமாகிய தனங்களுக்கு இனிமை தரும் பெருமான், கரும்பாகிய வில்லுடனும் முல்லையாகிய அம்புடனும் அவற்றைப் பற்றியிருந்த உடம்பும் வெந்து போர் புரிய வந்த காமனும் அழியத் தம் ஞானவிழியால் தண்டித்தவராகிய தட்சிணாமூர்த்தியின் திருவுள்ளத்துக்கு இனிமை தரும் குமாரன், தேவர்களின் தலைவனாகிய இந்திரனது லோகத்தில் யாவ ருடைய முடியிலும் மணிபோல வணங்குதற்குரியவனாக எழுந்தருளி யிருப்பவன். இனியபிரான், இனியவன், சிகாமணி என்று கூட்டுக. இனிய பிரான், எழுவாய்; மற்ற இரண்டும் பெயர்ப்பயனிலைகள். வள்ளியைக் காமுற்ற 2○ア