பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எங்காயினும் வரும் அறமும் அருளும் இதைப் போலவே இந்தப் பாட்டில் அருணகிரியார் நமக்கு உபதேசம் செய்கிறார். "நீ உன்பால் வந்து இரப்பவர்களுக்கு உன்னுடைய பொருளை இட்டால், அதனால் என்ன பயன் என்று நினைக்காதே. நீ அளிக்கிற கொடை உனக்கு எங்காயினும் வந்து உதவி பண்ணும். நீ செய்த தர்மம் ஒன்று, இறைவன் அருள் ஒன்று. இரண்டும் உனக்கு உதவி செய்ய எப்படி வரும் என்று உனக்கே தெரியாது. ஆனால் நீயே ஆச்சரியம் அடையும்படியாக எங்காயினும் அந்த இரண்டும் வந்து உதவும்' என்கிறார். பொங்கார வேலையில் வேலைவிட்டோன் அருள்போல் உதவ எங்காயினும் வரும், ஏற்பவர்க்கு இட்டது. அவர் விரதம் உத்தியோகத்தில் இருந்த ஒருவருடைய அன்னை மிக்க தர்ம நினைவு உடையவள். அவள் இறக்கும்போது தன் புதல்வரிடம் ஒன்றைச் சொல்லிப் போனாள். 'அப்பா, குழந்தைகளுடைய மனம் மிகவும் மேன்மையானது. குழந்தைகளைத் திருப்தி செய்தால் ஆண்டவன் திருப்தி அடைகிறான். உன் கையில் எது கிடைத்தாலும் உடனே அங்கே எந்தக் குழந்தை இருந்தாலும் அதனிடத்தில் ஒரு பகுதியைக் கொடுத்துவிட்டு எஞ்சியதைச் சாப்பிடு' என்று உபதேசம் செய்து போனார். அதிலிருந்து அவர் எப்போது எங்கே எதை உண்டாலும் குழந்தைகளுக்குக் கொடுக் காமல் சாப்பிடுவது இல்லை. ஒருநாள் ஒரு சமாராதனைக்கு உண்ணச் சென்றிருந்தார். உள்ள்ே நுழையும் போது ஓர் ஏழைக் குழந்தை வீதியில் நின்று கொண்டிருந்தது. அதை உள்ளே போய்ச் சாப்பிடவிடாமல் அங்கே இருந்தவர்கள் விரட்டிக் கொண்டிருந்தார்கள். அவர் உள்ளே போய்ச் சாப்பிட உட்கார்ந்த போது அவருக்கு அந்தக் குழந்தையின் நினைவு இருந்தது. உடனே அன்னை சொன்ன உரையும் அவருக்கு நினைவுக்கு வந்தது. அந்தச் சமயம் இலை யில் லாடு போட்டுக் கொண்டு வந்தார்கள். அவர் தம்முடைய லாடுவைக் கையில் வாங்கிப் பக்கத்தில் வைத்துக் கொண்டார். வெளியே வந்தவுடன் அந்த ஏழைப் பிள்ளையிடம் அதைக் கொடுத்தார். அதைத் தின்று அந்த பிள்ளை மிகவும் மகிழ்ச்சி 21 1