பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 யோடு ஒடுவதைக் கண்ட பிறகுதான் அவருக்கு மனத்தில் அமைதி உண்டாயிற்று. - பிள்ளைகளின் இயல்பு அந்த மனிதருக்கு இரண்டு பிள்ளைகள் இருந்தார்கள். இரண்டு பிள்ளைகளும் நன்றாகப் படித்து வேலைக்குப் போய் விட்டார்கள். அவருக்கும் வயசு ஆகிவிட்டதால் வேலையி லிருந்து ஒய்வு பெற்றுக் கொண்டார். ஒரு பிள்ளை எம்.ஏ. படித்து விட்டுத் திருநெல்வேலியில் பெரிய அதிகாரியாக இருந்தான். மற்றொருவன் கலெக்டராகக் கோயம்புத்தூரில் இருந்தான். அவருடைய மனைவி இறந்து போனாள். அப்போது அவர், 'இரண்டு பையன்களும் நல்ல வேலையில் இருக்கிறார்கள். ஒவ்வொருவர் வீட்டிலும் ஆறு ஆறு மாதம் இருந்து காலத்தை ஒட்டிவிடலாம். எதற்காகத் தனியாக நாம் வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும்? என்று நினைத்தார். உடனே தம்முடைய சொத்துக் களை எல்லாம் அவர்கள் இரண்டு பேருக்கும் சமமாக எழுதி வைத்துவிட்டு மூத்த பிள்ளையின் வீட்டுக்குத் திருநெல் வேலிக்குப் போய்விட்டார். - அங்கே கொஞ்சநாள் சிறப்பாக உபசாரம் நடந்தது. அவருடைய மூத்த மருமகள் மிகவும் பிரியமாகத்தான் அவரிடம் இருந்தாள். ஒரு நாளைக்குத் தன் கணவனிடம் அவள் பேசிக் கொண்டிருந் தது மாமனார் காதில் விழுந்தது. 'அப்பா இங்கேயே இருக்க லாம். அவர் இங்கே இருப்பது நமக்கு எவ்வளவோ மகிழ்ச்சியாக இருக்கிறது. இருந்தாலும் நீங்கள் ஒருவர் மாத்திரம் அவருடைய பிள்ளை அல்லவே! உங்கள் தம்பி தம்மிடம் வந்து இருக்க வில்லையே என்று வருத்தப்படமாட்டாரா? அவருக்கும் தம்மிடம் தம் அப்பாவை வைத்துக் கொள்ள வேண்டுமென்ற ஆசை இராதா? இவருக்கு அங்கே போக மனம் இல்லாவிட்டாலும் பேருக்கா வது பத்துநாள் போய் இருந்து வரச் சொல்லுங்கள். இல்லா விட்டால் நன்றாய் இராது" என்று மிகவும் நயமாகப் பேசினாள். அதைக் கேட்டவுடனே, "ஒகோ. நான் இங்கே இருப்பது அதற்குள் கைத்துவிட்டதோ? சரி, கோயம்புத்துருக்கு இன்றைக்கே போய்விடுகிறேன் என்று மனத்திற்குள் எண்ணிக் கொண்டு இரண்டாவது பிள்ளையிடம் சென்றார். 212