பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 "நானும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவன்தான். தமிழ்நாட்டில் எந்த ஊர் என்றான் அவன் மிக்க ஆவலோடு. அவருக்குத் தம் ஊரைச் சொல்லிக் கொள்ள முதலில் மனம் இல்லை; ஊர், பிள்ளைகுட்டி எல்லாவற்றையும் மறக்க வேண்டும் என்று ஓடிவந்தவர் அல்லவா? இருந்தாலும் அவன் முகத்தைப் பார்த்தவுடனேயே அவருக்குப் பொய் சொல்ல மனம் வரவில்லை. உண்மையைச் சொல்லாமல் இருக்க நாக்கு இடம் கொடுக்கவில்லை. 'கள்ளக்குறிச்சி அப்பா, கள்ளக்குறிச்சி: என்றார் சற்று உற்சாகம் இழந்தவராகவே. 'கள்ளக்குறிச்சியா? நானும் கள்ளக்குறிச்சிதான். கள்ளக் குறிச்சியில் யார்? உங்கள் பெயர் என்ன?' என்று அவன் முன்னையும்விட மிக்க ஆவலோடு கேட்டான். 'கள்ளக்குறிச்சியில் சுப்பிரமணிய தீட்சிதர் என்பார்கள் என்னை' என்று அவர் சொன்னாரோ இல்லையோ, அவன் அப்படியே நெடுஞ்சாண்கிடையாக அவருடைய காலில் விழுந்தான். 'சுவாமி என்னைத் தெரிகிறதா? உங்களால்தான் நான் இன்றைக்கு ஒர் ஆளாக இங்கே உத்தியோகம் செய்து பிழைத்துக் கொண் டிருக்கிறேன். நீங்களே என்னுடைய தந்தை. என்னுடைய வீட்டுக்கு வாருங்கள் என்று அவருடைய கால்களை இறுகப் பிடித்துக் கொண்டான். அவருக்கு ஒன்றும் புரியவில்லை. 'இவனை நாம் ஆளாக்கி விட்டோமா? நம்மால் ஆளாக்கிவிடப்பட்ட பிள்ளைகள் எல்லாம் நம்மையே விரட்டிவிட்டுச் சுகமாக இருக்கிறார்கள். இவனை நாம் முன்பின்கூட பார்த்தது இல்லையே! இவன் நமக்கு உதவி செய்ய வருகிறானே! என்று வியப்பில் மூழ்கி விட்டார். 'என்னை உங்களுக்குத் தெரியவில்லையா சுவாமி! வீட்டுக்கு வீடு கம்பக்காலைப் பிடித்துக் கொண்டு பிச்சை எடுத்து வந்தவன் நான். ஒரு நாளைக்கு ஒரு பெரிய சமாராதனையில் என்னை உள்ளே விடமாட்டோம் என்று எல்லோரும் அடித்து விரட்டினார்கள். நீங்கள் ஒரு பெரிய லாடுவை எடுத்து வந்து எனக்குக் கொடுத்தீர்களே அந்த லாடு எனக்கு எவ்வளவு இனிமை யாக இருந்தது, தெரியுமா? அதைச் சாப்பிட்டவுடனேயே 214