பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எங்காயினும் வரும் எனக்கு, இனி இதுமாதிரி வாங்கிச் சாப்பிடக்கூடாது. உழைத்துச் ராப்பிட வேண்டும்' என்கிற எண்ணம் உதித்தது. அப்புறம் ஆண்டவன் அருளால் சிலருடைய உதவியின் மேல் படித்து, இங்கே வேலை செய்து கொண்டிருக்கிறேன். அன்றைக்கு நீங்கள் லாடு கொடுத்தீர்களே, எங்கள் தகப்பனார் மாதிரி. நீங்கள்தாம் என் தந்தை' என்று அவன் விழிகளில் கண்ணிர் வாரப் பேசினான். அவர் அப்படியே சிலையாகச் சமைந்துபோய் உட்கார்ந் இருந்தார். அவர் மனம் என்ன என்னவோ நினைத்தது. ஆண்ட வனே, எனக்கு நீ இரண்டு பிள்ளைகளைக் கொடுத்தாய்; நல்ல வருமானத்தையும் அளித்தாய். என்னுடைய பொருளை எல்லாம் செலவழித்து அந்தப் பிள்ளைகளைப் படிக்க வைத்தேன். உன் அருளால் அவர்களுக்கு நல்ல வேலையும் கிடைத்தது. கல்யாண மும் ஆயிற்று. இனி எனக்கு என்று எத்ற்காகப் பணம் என்று என்னிடம் இருந்த எல்லாவற்றையும் அவர்கள் இரண்டு பேர்களுக்குமே கொடுத்தேன். வேறு யாருக்கும் இம்மி அளவும் கொடுக்கவில்லை. ஆனால் இவனிடம் நான்கு மாதம், அவனிடம் ஒரு மாதம் இருப்பதற்குள் பெற்ற தகப்பனாரையே வைத்துக் காப்பாற்ற அவர்கள் மேலும் கீழும் பார்த்தார்கள். அவர்கள் என்னிடம் அன்புடன் நடக்கவில்லை. நான் எப்போதோ, ஏதோ ஒரு நாளைக்கு இந்தப் பிள்ளைக்கு வேறு ஒர் இடத்தில் எனக்குக் கிடைத்த லாடு ஒன்றைக் கொடுத்தேன்; ஒருவேளைச் சாப்பாடுகூட இல்லை; கிடைத்ததிலே ஒரு பகுதியைக் கொடுத்தேன். அதுவா இத்தனை பெரிய அன்பாக இவன் உள்ளத்தில் விளைந்திருக்கிறது? இன்றைக்கு இவ்விடத்திலே என்னைக் காப்பாற்ற வந்து உதவுகிறது?’ என்று நினைந்து உள்ளம் உருகினார். இட்டது வரும் பொங்கார வேலையில் வேலை விட்டோன் அருள்போல் உதவ எங்காயினும் வரும் ஏற்பவர்க்கு இட்டது. ஏற்பவர்க்கு இட்டது எங்காயினும் வரும்; பசிக்கு ஏதாவது கிடைக்காதா என்று ஏங்குகிறவர்களை வலிய அழைத்து 'இந்தா 3.GlòI.IV-15 215