பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 அப்பா; இதைச் சாப்பிடு' என்று செய்கிற தர்மம் எங்காயினும் வரும். எந்த இடத்தில் எப்படி வரும் என்று சொல்ல முடியாது. நானூறு ரூபாயைப் பாங்கில் போட்டால் அது முதலும் வட்டியுமாக நமக்குப் பின்னே சேர்ந்து வருவதுபோல, நாம் என்றைக்கோ செய்த தர்மம் எங்காயினும் வட்டியும் முதலுமாக வந்து சேரும். எங்காயினும் எங்காயினும் என்றால் இந்த உலகத்தில் மாத்திரம் அல்ல. மறு பிறவியிலும் வரும். சிவஞானிக்கு ஒரு கவளம் அன்னம் போட்டால் எடுக்கிற பிறவியில் சோற்றுக்குப் பஞ்சம் இல்லாமல் வாழலாம். நீ அறம்செய்தால் உனக்கு அது பின்பு வந்து விளையும். பொருள் கொடுத்தால் அது பிறனால் உனக்குக் கொடுக்கப்படுகிற பொருளாக வந்து சாரும்’ என்று ஒளவையார் போன்றவர்கள் சொன்னார்கள். அருணகிரிநாத சுவாமிகள் அதையே சொன்னாலும் தமக்கு ஏற்ற முறையில் சொல்கிறார். அப்படிச் சொல்வதில் அவர் முத்திரை இருக்கிறது. அதற்கு ஓர் உவமை சொல்லுகிறார். 'எங்கள் பெருமானுடைய அருள்போல், ஏற்பவர்க்கு இட்டது எங்காயினும் வரும்' என்கிறார்; "வேலையில் வேலை விட்டோன் அருள் எங்காயினும் வரும்; அப்படியே யாசிப்பவர் களுக்கு அறம் செய்தால் அந்த அறப்பயனும் வரும்' என்பது அவர் கருத்து. 2 திருவருள் எங்காயினும் வரும் இறைவன் திருவருள் எப்படி வரும் என்று சொல்ல முடியுமா? எல்லோரும் அவரவர்களுடைய வாழ்க்கையில் நன்றாகக் காணலாம். இறைவன் திருவருளினாலே நல்லது பொல்லாதது ஆகிய இரண்டுமே வந்து கொண்டிருந்தாலும் தீமை வரும்போதுதான், 'கடவுள் என்னைப் இப்படி சோதிக்கி றாரே!” என்று பலர் நினைக்கிறார்கள். இறைவனுடைய அருளை உணர்வதற்கு நமக்கு மனம் இருந்தால் வாழ்க்கையில் ஒவ்வொரு 216