பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எங்காயினும் வரும் கனமும் அவனுடைய திருவருளை அநுபவிக்கலாம்; மகாத்மா காந்தி அநுபவிக்கவில்லையா? எதிர்பாராத நிகழ்ச்சி என்னுடைய பக்கத்து வீட்டில் ஒரு பெரிய உத்தியோகஸ்தர் இருந்தார். ஒருநாள் காரியாலய விஷயமாக டெல்லிக்குப் போக விமானச்சீட்டு முதற்கொண்டு வாங்கி வைத்துவிட்டார். அன்றைக்கு என்று அவருடைய குழந்தைக்குச் சற்று உடம்பு சரி யில்லை. மனைவி அவரைப் போகக்கூடாது என்று தடுத்து விட்டாள். தம்முடைய மனைவியிடம் அவருக்குக் கடுங்கோபம். மறுநாள் பத்திரிகையைப் பார்த்தார்; அவர் கிளம்பிச் செல்ல இருந்த விமானம் நடுவழியில் எரிந்துபோய் விழுந்து விட்டதாகச் செய்தி வந்திருந்தது. அதைப் பார்த்தவுடன்தான், இறைவனுடைய திருவருள் அல்லவா நம்மை ஊருக்குப் போகாது தடுத்திருக் கிறது?’ என்று நினைந்து உருகினார்; மனைவியிடத்தில் கோபித்துக் கொண்டோமே!’ என்று வெட்கப்பட்டார். ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் எதிர்பாராத நன்மைகள் இப்படி எத்தனையோ நம்முடைய சக்திக்கும் அப்பாற்பட்டன வாக நடந்து கொண்டிருக்கின்றன. அவற்றை எல்லாம் இறை வனுடைய திருவருள் என்று நினைக்க மனம் இல்லை. எதிர்பாராமல் வந்து நிற்கிற லாபத்தைக் காண்கிறோம். அதை நம் அதிருஷ்டம் என்று சொல்கிறோம். ஒருவன் எம்.ஏ. பரீட்சை எழுதுகிறான். கல்யாணம் நடக்கிறது. எம்.ஏ.யில் தேர்ச்சிபெற்ற செய்தி வருகிறது. உடனே வேலை கிடைக்கிறது. அவன் அது தன் மனையினுடைய அதிருஷ்டம் என்று நினைக் கிறான்; பானை பிடித்தவள் பாக்கியம் என்கிறான். இறைவன் திருவருள் என்கிற நினைப்பு அவனுக்கு வருகிறதா? இல்லை. எல்லாம் திருவருட் செயல் எதிர்பாராத வகையில் யாராவது எங்காயினும் உதவி செய்தால் அதை அவன் செய்தான் என்று நினையாமல் அவனைக் கருவியாகக் கொண்டு இறைவன் திருவருள் துணை செய்தது என்று நினைக்க வேண்டும். துன்பம் வந்தால் யாரோ நமக்கு 21了