பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-4.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 4 வேண்டுமென்றே செய்ததாக நினைக்கிறோம். அதனால் அவனி டம் கோபப் படுகிறோம். எதிர்பார்த்து விளைந்தால் நம்மால் விளைந்தது எனச் சொல்லிக் கொள்ளலாம். எதிர்பாராமல் எத்தனை காரியங்கள் நடக்கின்றன எதிர்பாராமல் நல்லது வந்தாலும் ஆண்டவன் திருவருள் என்று நினைக்க வேண்டும், தீயது வந்தாலும் அவ்வாறே நினைக்க வேண்டும். உடம்புக்கு நோய் வந்துவிட்டது. நோயைக் குணப்படுத்துபவர் டாக்டர் என்கிற நம்பிக்கை நமக்கு வந்துவிட்டதானால் அவர் இனிப்பு மருந்து கொடுத்தாலும் குடிக்கிறோம்; கசப்பு மருந்து கொடுத் தாலும் குடிக்கிறோம். டாக்டரிடம் யாராவது, 'இனிப்பு மருந்தே கொடுங்கள்; கசப்பு மருந்து வேண்டாம்' என்று சொல்ல முடியுமா? இன்ன நோய்க்கு இன்ன மருந்து கொடுக்க வேண்டும் என்பது அவருக்குத்தானே தெரியும்? உயிருக்கு வந்துள்ள நோய் பிறவி. நம்முடைய புண்ணிய பாவ வினைகளைக் கழுவிவிட வேண்டும் என்பதற்காகவே ஆண்டவன் இந்தப் பிறவியைக் கொடுத்திருக்கிறான். அவன் அருளால் நம்முடைய ஊழ்வினைக்கு ஏற்ப இன்ப துன்பங்கள் விளைகின்றன. துன்பம் வந்தாலும் இன்பம் வந்தாலும் ஆண்டவ னுடைய திருவருள் என்று நினைந்து வாழ்பவர்களுக்குத் துன்பத்தினாலே வருத்தம் இராது. ஆண்டவனுடைய சோதனை களில் தேர்ச்சி பெற்றால்தான் அவனுடைய அருள் பூரணமாகக் கிடைக்கும் என்று அவர்கள் நினைப்பார்கள். இன்ப துன்பம் இரண்டும் அவர்களுக்குச் சமமாகவே இருக்கும். ஒரு சின்னக்குழந்தையிடம், "ஒரு மணு இரும்பு கனமா? ஒரு மனு பஞ்சு கனமா?' என்று சிலர் வேடிக்கையாகக் கேள்வி கேட்பது வழக்கம். கொஞ்சம் மந்தமான குழந்தையாக இருந்தால் பஞ்சைவிட இரும்பு கனமாயிற்றே என்று எண்ணி, "இரும்பு தான் கனம்' என்று சொல்லும். புத்திசாலிக் குழந்தையோ, "ஒரு மனு என்பதே குறிப்பிட்ட கனத்தைச் சொல்வது தானே? பஞ்சாய் இருந்தால் என்ன? இரும்பாய் இருந்தால் என்ன? இரண்டு சமம்" என்று சொல்லும். அப்படி, இன்பமாக இருந் தால் என்ன? துன்பமாக இருந்தால் என்ன? இரண்டும் ஆண்ட வன் அருள்தான்' என்று நினைப்பவர்களுக்கு இன்பமும் துன்ப மும் சமமாகவே இருக்கும். இன்பத்தைக் கண்டு அவர்கள் மனம் t 218